துஷார்தேஷ் பாண்டே, சிமர்ஜித் சிங் வேகத்தில் சரிந்த ராஜஸ்தான்.. ஆறுதல் அளித்த ரியான் பராக்.. சிஎஸ்கே அபாரமான பந்துவீச்சு

இன்று கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் டாசை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசியது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். பவர் பிளேவில் எப்போதுமே அதிரடியாக விளையாட கூடிய இந்த ஜோடி சென்னை மைதானத்தில் மிகவும் ஸ்லோவாக விளையாடியது. பவர் பிளேவின் முடிவில் 42 ரன்கள் மட்டும் குவித்த நிலையில் அதற்கு பிறகு தங்களது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

- Advertisement -

ஜெய்ஸ்வாலின் பலவீனத்தை கணித்த சிமர் ஜித் சிங் அவரை ஷார்ட் பால் மூலம் வெளியேற்றினார். 21 பந்துகளில் 24 ரன்கள் குவித்த நிலையில் ஜெய்ஸ்வால் வெளியேற, அதற்குப் பிறகு மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பட்லரும் 25 பந்துகளில் 21 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 15 ரன்கள் குவித்து நிலையில் வெளியேறினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு ஆட்டத்தின் சூழ்நிலையை சரியாக உணர்ந்த ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரேல் ஜோடி ராஜஸ்தான் அணியின் ரன்களை வெகுவாக உயர்த்தியது. இதன் இடையில் ரியான் பராக்கின் கேட்ச் வாய்ப்பை சிஎஸ்கே வீணடித்தது. சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 29 பந்துகளில் 40 ரன்கள் குவித்த நிலையில் ஜூரேல் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 28 ரன்கள் குவித்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரியான் பராக் 35 பந்துகளில் 47 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் ஒரு பௌண்டரியும் மற்றும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். சென்னை மைதானம் வழக்கத்திற்கு மாறாக இன்று பந்துவீச்சுக்கு சாதகமாகவே காணப்பட்டது. பிட்ச் மிகவும் ஸ்லோவாக காணப்பட்டதால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க மிகவும் சிரமப்பட்டனர்.

- Advertisement -

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்த வீசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கேவின் சிமர் ஜித் சிங் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கு அடுத்ததாக துஷார் தேஷ் பாண்டே நான்கு ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க:ஜெய்ஸ்வாலின் பலவீனத்தை கணித்த சிமர்ஜீத்.. ராஜஸ்தான் டாப் ஆர்டர் காலி.. போட்டிக்கு முன்பு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிஎஸ்கே

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி ஏழு வெற்றிகளை பெற்று பிளே ஆப் சுற்றில் தொடர்ந்து நீடிக்கும். மேலும் சொந்த மைதானம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles