பஞ்சாப் அணியின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை.. அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா சோகம்

நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றியும், ஏழு போட்டிகளில் தோல்வியும் தழுவி புள்ளி பட்டியலில் தற்போது எட்டாவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணியின் செயல்பாடுகள் தனக்கு மகிழ்ச்சிகரமாக இல்லை என்று அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரை பொருத்தவரை இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று பஞ்சாப் கிங்ஸ் அணி. இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறை இறுதிப் போட்டிக்கும், ஒருமுறை அரையறுதியிலும் தகுதி பெற்றது. இந்த அணியை பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு கேப்டன், வருடத்திற்கு ஒரு பயிற்சியாளர் என்று மாற்றங்கள் நிகழும்.

- Advertisement -

கடந்த இரண்டு சீசன்களாக மட்டும் ஓரளவு சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஏனெனில் ஐபிஎல்லில் முன்னணி அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது. இந்த சீசனில் அணியின் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக ஓய்வில் இருக்க அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஷாம் கரண் கேப்டன்ஷிப்பை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவினாலும், சென்னை, மும்பை மற்றும் குஜராத் ஆகிய அணிகளை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இருக்கிறது. மேலும் இனிவரும் நான்கு போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் பணியின் செயல்பாடுகள் தமக்கு திருப்திகரமாக இல்லை என்று அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவாக கூறும்பொழுது
“பஞ்சாப் கிங்ஸ் அணியின் செயல்பாடுகளில் நிச்சயமாக மகிழ்ச்சியாகவோ, திருப்திகரமாகவோ எனக்கு அமையவில்லை. இந்த சீசனில் கடைசி பந்தில் மட்டும் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளோம்.

- Advertisement -

பஞ்சாப் அணியின் கேப்டன் சிகார் தவான் காயத்தில் இருக்கும் நிலையில், சில போட்டிகளில் மிகச் சிறந்த ஆட்டத்தையும் வெற்றி பெறவேண்டிய தருணங்களில் வெற்றி பெறாமலும் அணியின் நிலைமை இருக்கிறது. வரும் காலங்களில் சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளை வென்றால் மட்டுமே சிறப்பான சீசன் ஆக அமையும் என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:அடி தூள்.. நடப்பு சாம்பியன் இல்லை.. டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்த 2 அணிகள்தான் மோதும்.. கங்குலி கணிப்பு

மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது வீரராக மட்டுமே விளையாடி வரும் ரோகித் சர்மா அடுத்து நடைபெற இருக்கும் மெகா ஆக்ஷனில் கலந்து கொள்கிறார் என்றும், அவரை பஞ்சாப் அணி வாங்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எனவே அவரது தலைமையிலாவது பஞ்சாப் அணி கோப்பையை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles