அடி தூள்.. நடப்பு சாம்பியன் இல்லை.. டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்த 2 அணிகள்தான் மோதும்.. கங்குலி கணிப்பு

தற்போது இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் வேளையில், மே 26ஆம் தேதியோடு ஐபிஎல் தொடர் முடிவடைகிறது. இதற்குப் பிறகு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

- Advertisement -

இதற்காக இரண்டு நாடுகளும் மைதானங்களை தீவிரமாக தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகள்தான் தகுதி பெறும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் முக்கியமான தொடரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இதற்காக அனைத்து சர்வதேச அணிகளும் மற்ற அணிகளுடன் டி20 தொடரில் பங்கேற்று வருகின்றன.

- Advertisement -

இதில் இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக ஐபிஎல் தொடரில் அனைத்து வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் 2007ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் கடைசியாக இந்திய அணி டி20 உலக கோப்பை வென்றது. தோனியின் ஓய்வுக்கு பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா என்று இரண்டு கேப்டன்கள் வந்த போதிலும் இந்திய அணியால் உலக கோப்பையை வெல்ல முடிய வில்லை.

தற்போது அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக பலமான இந்திய அணியை இந்திய தேர்வு குழு தற்போது தேர்வு செய்துள்ளது. இந்தியா தவிர மற்ற அணிகளின் அணி தேர்வும் வலுவாகவே உள்ளதால் இந்த உலகக் கோப்பை தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கலந்து கொள்ளும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவரும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருமான கங்குலி தெரிவித்திருக்கிறார். இந்தியா போன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் வலுவாகவே விளங்கிய போதிலும் கங்குலி இறுதிப்போட்டிக்கு இந்த இரண்டு அணிகள்தான் மோதும் என்று ஆருடம் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:அடப் போங்கப்பா..இவருக்கும் காயமா.? சிக்கலில் மாட்டி தவிக்கும் சென்னை அணி.. கிரிக்கெட் போர்டு அழுத்தமா.? காரணம் என்ன?

ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கலந்து கொண்டு அதில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது நினைவிருக்கலாம். அப்படி இந்த டி20 உலக கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் கலந்து கொண்டால் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த இறுதிப் போட்டி இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles