சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு போட்டி தொடங்குவதற்கு முன்னரே தனது கேப்டன் பதவியை இளம் வீரரான ருத்ராஜிடம் ஒப்படைத்து விட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக அணியில் தொடர்கிறார்.
மகேந்திர சிங் தோனி தனது ஓய்வினை அறிவித்த பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பதவிக்கு வர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து வந்த மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இதுவரை 5 பட்டங்களை வென்று கொடுத்திருக்கிறார். அவர் கடைசியாக 2023ஆம் ஆண்டு ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக தனது கேப்டன்சியை இளம் வீரரான ருத்ராஜிடம் ஒப்படைத்தார்.
இந்த சீசனை பொருத்தவரை ஓரளவு சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றியும், நான்கு போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது. ஆனால் கடந்த சீசன்களை விட மகேந்திர சிங் தோனி இந்த சீசனில் பேட்டிங்கில் அபாரமாக விளையாடி வருகிறார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் இறங்கும் மகேந்திர சிங் தோனி பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதுவே மகேந்திர சிங் தோனிக்கு கடைசி சீசன் ஆக இருக்கும் என்பதால் ரசிகர்களும் தோனியை காண மைதானத்திற்கு படை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி ஓய்விற்கு பிறகு சிஎஸ்கேவின் ஆலோசகராக இருப்பார் என்று தகவல் வெளியாகியது. மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் கௌதம் கம்பீர் எப்படி இருக்கின்றனவரோ அதேபோல சென்னை அணியிலும் தோனி இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை அணியின் சிஇஓ பதவிக்கு தோனி வர இருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிஎஸ்கேவின் சிஇஓ ஆக காசி விஸ்வநாதன் செயல்பட்டு வருகிறார். அவருக்குப் பிறகு சிஎஸ்கேவின் அந்த பதவிக்கு தோனியை கொண்டு வர நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் ஆகியோர் எடுக்கும் முடிவுகளே இறுதியானது.
இதையும் படிங்க:ஆர்சிபிக்கு இன்னமும் இருக்கும் பிளே ஆப் வாய்ப்பு.. ஆனால் இவை எல்லாம் நடக்க வேண்டும்.. முழு விபரம்
இருப்பினும் சில சமயங்களில் பிளமிங்கை காட்டிலும் தோனிதான் முக்கிய முடிவுகளை எடுப்பார். அந்த அளவிற்கு ஸ்ரீனிவாசன் தோனியின் மீது அளவு கடந்து நம்பிக்கை வைத்துள்ளார். எனவே இனி வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்திலும் சென்னை தரப்பில் மகேந்திர சிங் தோனி கலந்துகொண்டு வீரர்களை ஏலத்தில் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

