சிவம் தூபே அதுக்கு செட் ஆக மாட்டார்.. ஹர்திக் பாண்டியாதான் சரியாக இருக்கும்.. அம்பத்தி ராயுடு பேட்டி

டி20 கிரிக்கெட்டை பொருத்தவரையில் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை முடிப்பதற்கு சிவம் துபேவை விட ஹர்திக் பாண்டியாதான் சரியான மாற்று வீரராக இருப்பார் என்று அம்பத்தி ராயுடு கூறியிருக்கிறார்.

- Advertisement -

டிசம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டு அதற்குப் பிறகு எந்த ஒரு சர்வதேசத் தொடரிலும் விளையாடாமல் ஐபிஎல்லில் களமிறங்கினார். கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்காக களமிறங்கினார்.

- Advertisement -

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே மோசமான பங்களிப்பை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சிவம் துபே இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

ரோகித் சர்மா விராட் கோலி ஹர்திக் பாண்டியா என்று முன்னணி வீரர்கள் பலரும் விளையாடாத நிலையில் இந்திய அணி புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஒரு புதிய டி20 அணியை உருவாக்கியது. அதில் சிவம் டுபேவிற்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு சரியான மாற்று வீரரை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் சிவம் துபே பேட்டிங்கில் மிடில் ஓவர்களில் களமிறங்கி சுழற் பந்து வீச்சை தாக்கும் வீரராக உருவெடுத்து இருக்கிறார். பத்தாவது ஓவருக்கு மேல் இவர் களமிறங்கினாலே மற்ற அணியின் கேப்டன்கள் சுழற் பந்து வீச்சை ஒதுக்கி வைத்து வேகப்பந்து வீசும் பந்து வீச்சாளர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆல் ரவுண்டர் ஆன இவர் பந்து வீசும் வாய் பேசிய அணிவருக்கு தரவில்லை.

- Advertisement -

எனவே இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு பேசும்போது
சிவம் தூபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் ஒரே இடத்துக்கு போட்டியிட முடியாது ஏனெனில் சிவம்தூபெ நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி சுழற் பந்துவீச்சை அடித்து ஆடக்கூடிய கேம் சேஞ்சர் ரோலில் இருக்கிறார்.

இதையும் படிங்க:தங்கச் சங்கிலி அணிந்து ஜொலித்த தமிழக யார்க்கர் கிங்.. டெல்லிக்கு எதிராக செய்த தரமான சம்பவம்..

மேலும் 16 முதல் 20 வது ஓவர்களில் சிவம் துபே பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை மேலும் அந்த குறிப்பிட்ட ஓவர்களில் சிவம் தூபேவுக்கு ஸ்ட்ரைக் ரேட்டும் குறைவாக இருக்கிறது. எனவே இறுதிக்கட்டத்தில் ஃபினிஷர்களாக களம் இறங்கி விளையாட ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles