தங்கச் சங்கிலி அணிந்து ஜொலித்த தமிழக யார்க்கர் கிங்.. டெல்லிக்கு எதிராக செய்த தரமான சம்பவம்..

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் வலுவாக விளங்கி வருகிறது. கடந்த சீசனில் மார்க்ரம் தலைமையில் படு தோல்விகளை சந்தித்து வந்த ஹைதராபாத் அணி, நடந்து முடிந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் கம்மின்சை 21 கோடி ரூபாய்க்கு வாங்கி அவரையே கேப்டனாக நியமித்தது.

- Advertisement -

மேலும் நித்திஷ் ரெட்டி, மயங்க் மார்க்கண்டே போன்ற திறமையான இளம் வீரர்களை வாங்கியது. மேலும் அதிரடிக்கு பெயர் போன ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஆன ட்ராவிஸ் ஹெட்டை வாங்கி சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கியது.

- Advertisement -

அன்று முதல் சன்ரைசர்ஸ் அணிக்கு தொட்டதெல்லாம் தங்கம் போல இந்த சீசனில் மொத்தம் ஏழு போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியையும் தழுவி இருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணி இனி விளையாடவிற்கும் 7 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றாலே போதும். ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்ற பிறகு ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு 80 பவுன் கொண்ட தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படும். இந்த தங்கச் சங்கிலியை ஏற்கனவே கிளாஸன் மற்றும் டிராபிஸ் ஹெட் வாங்கியுள்ள நிலையில் கடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசி வெறும் 19 ரகளை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய தமிழக வீரர் நடராஜனுக்கு சன்ரைசர்ஸ் அணி சார்பில் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்பட்டது.

- Advertisement -

மேலும் தங்கச் சங்கிலி அணிவித்த பின்னர் அவரது பெயர் பொரித்த கேக்கை வெட்டும் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சேலத்தைச் சேர்ந்த நடராஜன் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக கலக்கிய நடராஜன் அதன் பிறகு காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை.

இதையும் படிங்க:இர்பான் பதான் தேர்வு செய்துள்ள டி20 உலகக் கோப்பை அணி.. தரமான சிஎஸ்கே வீரர் இல்லை.. ஃபார்மில் இருக்கும் முக்கிய வீரர்கள் மிஸ்ஸிங்

தற்போது சன்ரைசர்ஸ் அணியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் வருகிற டி20 உலக கோப்பையில் இவரை கட்டாயம் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த சேலத்தைச் சேர்ந்த சின்னப்பம்பட்டி நடராஜன் உலக கோப்பையில் பங்கு பெற்று சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்த அனைவரும் வாழ்த்துவோம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles