பழி தீர்க்குமா சென்னை அணி.? சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை.. சிஎஸ்கேவின் உத்தேச பிளேயிங் லெவன்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முந்தைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சிஎஸ்கே பதிலடி கொடுக்குமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

இன்று நடைபெற இருக்கிற 39 வது லீக் போட்டியில் ருத்ராஜ் தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் குவிக்க, அதற்கு பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 180 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த இரண்டு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் ரவிந்திர ஜடேஜாவின் பங்கு இப்போட்டியில் அதிக முக்கியத்துவம் பெறும்.

- Advertisement -

மேலும் 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான டாரி மிச்சல் தொடர்ந்து சொதப்புவதை அடுத்து அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான மொயின் அலி முந்தைய போட்டியில் களமிறங்கினார். மேலும் சுழற் பந்துவீச்சாளரான அவர் சென்னை மைதானத்தில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங், வேகப் பந்துவீச்சு மற்றும் சுழற் பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் லக்னோ அணிக்கு சமமாக விளங்குவதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் லக்னோ அணியை பொறுத்த வரை இந்த சீசனில் நன்றாகவே செயல்பட்டு வருகிறது இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டியில் தோல்வியும் தழுவி புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த இடத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

- Advertisement -

லக்னோ அணியின் அதிவேக சுழற் பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் கடந்த மூன்று போட்டிகளாக காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க போகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச பிளேயிங் லெவனைக் லெவனைக் காணலாம்.

இதையும் படிங்க:எல்லாருக்கும் அவங்க வேலை என்னனு நல்லா தெரியும்.. ஜெய்ஸ்வால் பிரமாதமா விளையாடினார்.. வெற்றிக்கு பின்னர் பேசிய சஞ்சு சாம்சன்

சிஎஸ்கே: ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேட்ச்), மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா

இம்பாக்ட் வீரர்கள்: சமீர் ரிஸ்வி மற்றும் தீபக் சாஹர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles