நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையேயான போட்டியில், சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டிகள் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்துவீச்சாளர் மதிஷா பத்திராணா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர் ஒவ்வொரு விக்கெட் வீழ்த்திய பிறகும், இவரது வெற்றி கொண்டாட்ட சைகை குறித்து மற்றொரு ஆல்ரவுண்டரான சிவம் துபே கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிரானா சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.
சென்னை அணிக்கு தற்போது வலிமையான வேகப்பந்து வீச்சாளராக மாறிவரும் மதிஷா பத்திரனா மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் வெறும் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து முக்கிய நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது.
அதற்குப் பின்னர் பேட்டிங் செய்த மும்பை அணி ஏழு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய பத்திரனா இசன் கிசானின் விக்கெட்டை வீழ்த்தி, மும்பை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில் ஒவ்வொரு விக்கெட் வீழ்த்தும் போதும் பத்திரனா கைகளை மடக்கி, கண்களை மூடி வானத்தை நோக்கி இரண்டு வினாடிகள் அமைதியாக நின்று தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவார். இது பார்ப்பதற்கு குத்துச்சண்டை வீரரான அண்டர்டேக்கர் போல் இருக்கிறது என்று மற்றொரு ஆல் ரவுண்டர் சிவம் டூபே கேள்வி எழுப்ப, அதற்கு போர்ச்சுக்கல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சைகையை பின்பற்றுவதாக கூறி இருக்கிறார்.
மேலும் இது குறித்து அவர் கூறும் பொழுது
“இல்லை அது அண்டர்டேக்கர் இல்லை. நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகன். எனவே அவரது செய்கையைப் பின்பற்றி வெற்றியினை கொண்டாட விரும்புகிறேன். அவரது செய்கை பின்பற்றி நான் கண்களை மூட முயற்சி செய்யும்பொழுது, என்னால் துரதஷ்டவசமாக முழுவதுமாக மூட முடியாது” என்று வேடிக்கையாக தூபவிடம் கூறினார்.
இதையும் படிங்க:பாண்டியாவின் மனதில் பல வேதனைகள் இருக்கிறது.. மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்கிறார்.. கூறுகிறார் இங்கிலாந்து வீரர்
பதிரானாவின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் மும்பை அணி தனது நான்காவது தோல்வியை சென்னை அணிக்கு எதிராக சந்தித்து இருக்கிறது. எனவே இனிவரும் போட்டிகளில் சீரியசாக விளையாடி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சென்னை அணி நான்காவது வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

