17வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இணை இயக்குனர் ஆகாஷ் அம்பானியுடன் காரில் வரும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக ரோஹித் சர்மா மும்பை அணியில் இருந்து கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து குஜராத் அணியிலிருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றி அவரை கேப்டனாக நியமித்தது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்தத் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்து ஐந்தாவதாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியுடன் கணக்கை தொடங்கியிருக்கிறது. எனவே மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக வெற்றிகளை பெறுவதன் மூலம் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
ரோகித் சர்மாவின் விருப்பமே இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி அவரிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்து ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்ததாக ஒரு வதந்தி பரவி வருகிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகுவதாகவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை அடுத்த ஆண்டு வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இது குறித்து அம்பத்தி ராயுடுவிடம் கேட்கப்பட்டபோது மும்பை இந்தியன்ஸ் அணியை போல இல்லாமல் வேறு ஐபிஎல் அணி அவரை சிறப்பாக கையாண்டால் நிச்சயமாக அந்த அணிக்குச் செல்வார் என்று பரபரப்பான கருத்தினை கூறியிருந்தார். இந்த நிலையில்பெங்களூர் மும்பை போட்டி தொடங்குவதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இணை இயக்குனர் ஆகாஷ் அம்பானி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒன்றாக காரில் வரும் வீடியோ வைரலானது.
அந்த வீடியோவில் ஆகாஷ் அம்பானியின் விலை உயர்ந்த காரான பென்ட்லி பென்டேகா காரின் முன் இருக்கையில் ரோகித் சர்மா அமர்ந்திருந்தார். இந்த நிலையில் இந்த சீசனின் மத்திய பகுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க:சனியன் பின்னாடி போய் நில்லு.. சக வீரரை திட்டிய அஸ்வின்.. மாட்டிவிட்ட ஸ்டம்ப் மைக்.. நடந்தது என்ன.?
மேலும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷியில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு சிறிய அதிருப்தி என்றும் தகவல் வெளிவரும் நிலையில், மீண்டும் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. மேலும் இந்த சீசனின் தொடக்கத்தில் சன் ரைசர்ஸ் அணியுடன் ஆட்டத்திற்கு பிறகு ஆகாஷ் அம்பானி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Rohit Sharma With Mumbai Indians Owner Akash Ambani 🧐
— Vaibhav Bhola 🇮🇳 (@VibhuBhola) April 10, 2024
Are We Going To See Any Big Surprise During Mid Season ? pic.twitter.com/E0lEStdLE1

