ஜடேஜா செஞ்ச வேலைக்கு காரணமே தோனிதான்.. உண்மையை உடைக்கும் துஷார் தேஷ்பாண்டே

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இறுதியில் ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தது போல திரும்பவும் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் சென்றதற்கு காரணமே மகேந்திர சிங் தோனி செய்த வேலைதான் என்று சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

நேற்று சிஎஸ்கேவின் சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரண்டு தோல்விகளைப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமாக அமைந்தது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைமையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

- Advertisement -

சிஎஸ்கேவின் அபார பந்துவீச்சினை தாக்குப்பிடிக்க முடியாமல் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே குவித்தது. சுலற் பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா அபாரமாக பந்து வீசி மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.

- Advertisement -

அவர் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட, அவருக்கு பக்கபலமாய் டாரி மிச்சல் பார்ட்னர்ஷிப் அமைக்க, இறுதியாக சிவம் தூபே வந்து அதிரடியாக விளையாட, கடைசியில் மூன்று ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் சிவம் தூபே எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். இதை அடுத்து மகேந்திர சிங் தோனிதான் களமிறங்க போகிறார் என்று பெரிய திரையில் காட்டிய போது ரசிகர்கள் ஆரவாரத்தில் கொந்தளித்தனர்.

ஆனால் பெரிய திரையில் தோனியை காட்டி விட்டு ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து ரவீந்திர ஜடேஜா வெளிவந்த போது ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைய, திரும்பவும் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் ஜடேஜா சென்று விடுவார். ஜடேஜாதான் விளையாட்டுத்தனமாக செய்திருக்கிறார் என்று அனைவரும் நினைத்த வேளையில், தோனிதான் அவ்வாறு செய்யச் சொன்னார் என்று துஷார் தேஷ்பாண்டே தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது
“நான்தான் அடுத்தது களமிறங்க போகிறேன் ஆனால் அதற்குள் நீங்கள் பேட்டிங் செய்யப் போவது போல் நடிங்கள் என்று ஜடேஜாவிடம் தோனி பாய் கூறிய போது நான் உடைமாற்றும் அறையில் அவர்களுக்கு அருகில் இருந்துதான் கேட்டேன் என்று கூறினார். இது குறித்து ஜடேஜா கூறும்போது “தோனி பேட்டிங் செய்ய வருகிறார் என்று திரையில் காட்டிய போது ரசிகர்களின் ஆரவாரம் பெரிதாக இருந்தது. அப்போது அவர்கள் வெளிக்காட்டிய மகிழ்ச்சி அவர்களிடம் இருக்கும் பணத்திற்கு சமமானது” என்று கூறினார்.

இதையும் படிங்க:மனசார சொல்றேன்.. கம்மின்ஸ், ருத்துராஜ் எல்லாம் இல்லப்பா.. இந்த வருஷம் சிறந்த கேப்டன் இவர்தான்- ஸ்டீவ் ஸ்மித் அதிரடி பேட்டி

மேலும் துசார் தேஷ் பாண்டே கூறும் பொழுது “கொல்கத்தா அணிக்கு எதிரான திட்டம் குறித்து கேட்கிறீர்கள். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு எதிராகவும் எங்களுக்கு திட்டமிருந்தது.
பில் சால்ட் எதிராக ஜடேஜா ஒரு அற்புதமான கேட்ச் எடுத்தார். சால்ட் இந்த சீசனில் அற்புதமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் விக்கட்டினை முதல் பந்திலேயை எடுக்க முடிந்தது நல்லதாக அமைந்தது. இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles