இது சிஎஸ்கே கோட்டை.. என்ன பண்ணனும்னு அங்களுக்கு தெரியும்.. இந்த தோல்வி எங்களுக்கு தேவைதான்.. ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

- Advertisement -

நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர் அணி தற்போது முதல் தோல்வியை பதிவு செய்திருக்கிறது. டாசை இழந்த கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய பவர் பிளேவுக்குப் பிறகு சென்னை ஆடுகளம் அப்படியே பந்துவீச்சுக்கு சாதாரணமாக மாறியது. இதனை சென்னை அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். பவர் பிளேவரை 54 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த கொல்கத்தா அணி அதற்குப் பிறகு ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது.

- Advertisement -

சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சினால் கொல்கத்தா அணியினரால் சுலபமாக ரன்களை குவிக்க முடியவில்லை. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே 34 ரன்கள் குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தது.

- Advertisement -

இரண்டு தோல்களைப் பெற்ற சென்னை அணிக்கு இந்த வெற்றி மிகவும் முக்கியம் என்பதால், பேட்டிங்கில் மிகவும் கவனமாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் சச்சின் ரவீந்தரா 15 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அணியின் கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடினார். அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இறுதிக்கட்டத்தில் சிவம் துபே அதிரடியாக விளையாடி ஆட்டத்தை சென்னை பக்கம் முற்றிலுமாக சாய்த்தார். 18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சிவம் தூபே மூன்று சிக்ஸர்கள் மூலம் 28 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை அணியை 17.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்த சீசனில் சென்னை அணிக்கு எதிராக முதல் தோல்வியை பதிவு செய்துள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது
“சென்னை அணியின் ஆடுகளத்தின் தன்மையை நாங்கள் நன்றாக புரிந்து கொள்ளவில்லை. பவர் பிளேவில் சிறப்பாக விளையாடிய அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். முதல் ஆறு ஓவர்கள் வரை ஆடுகளம் நன்றாக இருந்தது. அதற்குப் பின்னால்தான் முற்றிலுமாக பந்துவீச்சுக்கு சாதமாக மாறியது.

இதையும் படிங்க:தோனி மூலமா எனக்கு பழைய ஞாபகங்கள் வருது.. வெற்றிக்குப் பின்னர் ருத்ராஜ் பேட்டி

இங்கு ரன்களைக் குவிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றாகவே தெரியும். இங்குள்ள நிலைமைகள் குறித்து அவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். இங்கு முதல் பந்தில் இருந்தே பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சித்தோம். ஆனால் அது கை கொடுக்கவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததாலும் பேட்டிங்கில் வேகமாக செல்லவும் முடியவில்லை. தொடக்கத்திலேயே இப்படி ஒரு தோல்வியை சந்தித்ததும் ஒரு நல்ல விஷயம்தான்.

நாங்கள் எங்களது சொந்த மைதானத்திற்கு திரும்பிய பிறகு நிலைமைகளை சரி செய்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்” என்று கூறியிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles