தோனி மூலமா எனக்கு பழைய ஞாபகங்கள் வருது.. வெற்றிக்குப் பின்னர் ருத்ராஜ் பேட்டி

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இரண்டு தோல்விகளுக்கு பின்னர் பெற்ற வெற்றியின் மூலம் சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் வலுவான பேட்டிங் வரிசையினால் பெரிய ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை அணியினர் ஆரம்பம் முதலில் சிறப்பாக பந்து வீசி சென்னை அணி கொல்கத்தா அணியைக் கட்டுப்படுத்தி விட்டது.

- Advertisement -

கொல்கத்த அணியை பொருத்தவரை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 32 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்ததாக சுனில் நரேன் 20 பந்துகளில் 27 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். கொல்கத்தா அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சு அமைந்தது. நான்கு ஓர்கள் பந்து வீசி வெரும் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்து இருந்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்திரா 15 ரன்களில் ஆட்டம் இருந்து வெளியேறினாலும், மறுமுனையில் கேப்டன் ருத்ராட்ஜ் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 58 பந்துகளை எதிர் கொண்ட ருத்ராஜ் ஒன்பது பவுண்டரிகளுடன் 67 ரன்களை குவித்தார். பின் இறுதியில் அதிரடியாக விளையாடும் துபே 18 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 28 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் சென்னை அணி 18 வது ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த சிறப்பான வெற்றிக்கு பின்னர் சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கூறும் பொழுது
“எனக்கு இப்போது பழைய ஞாபகங்கள் வருகிறது. என்னுடைய முதல் போட்டியில் நான் அரை சதம் அடிக்கும் பொழுது தோனி பாய் என்னுடன் இருந்தார். இந்த முறை ரகானே காயம் அடைந்ததால் பேட்டிங் பொறுப்பு என் மீது இருந்தது. நான் மற்ற பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தம் கொடுக்க விரும்பாமல் நானே எடுத்துச் செல்ல விரும்பினேன்.

- Advertisement -

இது 150 முதல் 160 ரன்கள் வரை எடுப்பதற்கான ஆடுகளம்தான். பவர் பிளே முடிந்ததும் எப்போதும் ரவீந்திர ஜடேஜா பந்து வீச வருவார். இந்த முறையும் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். சென்னை அணியை பொறுத்த வரையில் நான் யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் அவரது வேலைகள் குறித்து நன்றாக தெரியும். அதுபோக சென்னை அணியில் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் ஆகியோர் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:3 ரன்னை தாண்டாத 5 பேர்.. ஒரே ஓவரில் நடந்த ட்விஸ்ட்.. ஜடேஜாவின் சுழலில் சிக்கிய கொல்கத்தா.. சென்னை அணி சிறப்பான வெற்றி

என்னுடைய பேட்டிங்கை பொறுத்த வரை மெதுவான தொடக்கம் என்று நான் நினைக்க மாட்டேன். டி20 கிரிக்கெட் பொருத்தவரையில் சில நேரம் அதிர்ஷ்டமும் தேவை. கிரிக்கெட் வல்லுனர்கள் தற்போது என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி ஏதாவது கருத்து சொல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறி முடித்திருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து மூன்றாவது வெற்றியை பெற்றிருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles