3 ரன்னை தாண்டாத 5 பேர்.. ஒரே ஓவரில் நடந்த ட்விஸ்ட்.. ஜடேஜாவின் சுழலில் சிக்கிய கொல்கத்தா.. சென்னை அணி சிறப்பான வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 17வது ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வலுவான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

சென்னையின் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய முன்னாள் தேர்வுக்குழு தலைவரான ஸ்ரீகாந்த் ஆடுகளம் சுழலுக்கு நன்கு சாதகமாக இருக்கும் என்று தெரிவித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பில் சால்ட் துஷார்தேஸ் பாண்டே வீசிய முதல் பந்திலேயே ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்குப் பின்னர் வந்த ரகுவன்சி சுனில் நரைனோடு பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடி பவர் பிளேவின் முடிவில் 56 ரன்கள் குவித்தனர். இதற்குப் பின்னர் இந்த கூட்டணியை சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா உடைத்தார். அவர் வீசிய முதல் பந்தியிலேயே ரகுவன்சி ஸ்வீப் ஷாட் ஆட முயற்சிக்க அது எல்பிடபிள்யு ஆனது. இதற்குப் பின்னர் வந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாட, மற்றொரு பேட்ஸ்மேன் ஆன சுனில் நரேன் ஜடேஜாவின் பந்துவீச்சிலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதாவது ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் ஜடேஜா வீசிய முதல் பந்தில் ரகுவன்சி அவுட் ஆக, ஐந்தாவது பந்தில் சுனில் நரேன் வெளியேறினார். இங்குதான் ஆட்டத்தில் திருப்புவனம் ஏற்பட்டது.

- Advertisement -

பவர் பிளேவரை நன்றாக சென்று கொண்டிருந்த கொல்கத்தா அணி, சிஎஸ்கே கேப்டன் சுலற் பந்து வீச்சினை கொண்டு வந்த பிறகு ரன் வேகம் வெகுவாகவே குறைந்தது. மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழக்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரசல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிதானமாக விளையாடி 32 ரன்கள் குவித்தார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்தது. சுமாரான பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் 5 பேட்ஸ்மேன்கள் மூன்று ரன்களைக் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜிரேஜா நான்கு ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் எளிய இலக்கினை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா இந்த முறை 15 ரன்களில் வெளியேற, அதன் பிறகு களம் இறங்கிய டாரி மிச்சல் நிதானமாக விளையாட, மறுமுனையில் கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.

- Advertisement -

கடந்த நான்கு போட்டிகளாக பெரிதும் சோபிக்காத ருத்ராஜ் இந்த முறை சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் டாரி மிச்சல் 25 ரன்களில் ஆட்டம் இழக்க அதன் பிறகு வந்த சிவம் துபே 14 பந்துகளில் ஒரு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என அதிரடியாக 28 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்னர் அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவை என்று இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மகேந்திர சிங் தோனி களம் இறங்கினார்.
அப்போது சென்னை மைதானமே அதிர்ந்தது.

இதையும் படிங்க:கொல்கத்தாவை சமாளிக்குமா சிஎஸ்கே?. நட்சத்திர வீரரும் காயம்.. செய்ய வேண்டிய நான்கு மாற்றங்கள்

ஆனால் பெரிதும் அலட்டிக் கொள்ளாத தோனி சிங்கிள் எடுத்து ருத்ராஜிடம் ஒப்படைக்க, இறுதியாக பௌண்டரி அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார் ருத்ராஜ்.சிறப்பாக விளையாடிய அவர் 58 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சென்னை அணி 18 வது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles