சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் பலம் வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. சிஎஸ்கே இந்த சீசனின் தொடக்கத்தை சிறப்பாகதான் தொடங்கி இருந்தது.
சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான நிலையிலே இருந்தது. ஆனால் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றவுடன் இரண்டு அடுத்தடுத்த தோல்விகள். சொதப்பலான பேட்டிங் பெர்ஃபார்மன்ஸ், முன்னணி வீரர்களின் காயம் என முதலில் வலுவான ஒன்றாக தெரிந்த சென்னை அணி இப்போது சுமாராகவே தெரிகிறது.
தோல்வியடைந்த இரண்டு போட்டிகளும் வெளி மைதானங்களில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த போட்டி மீண்டும் சென்னையில் நடைபெறுவதால் மீண்டும் சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்புமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. வலுவான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள சென்னை அணி நான்கு மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கிறது
1.பவர் பிளவில் அதிக ரன்கள் குவிப்பது அவசியம்
முதலில் பவர் பிளேவில் சென்னை அணி அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிக்க வேண்டும். முதல் இரண்டு போட்டிகளைத் தவிர அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னை அணியின் பவர் பிளே ஸ்கோர் 52 ஆக இருக்கிறது. இதுவே கொல்கத்தா அணி கடைசி மூன்று போட்டிகளில் விளையாடி அதில் இரண்டு போட்டிகள் சராசரி 80ஆக வைத்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் இன்னும் பார்முக்கே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு போட்டியில் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சொதப்பி இருக்கிறார். எனவே அவரும் பார்முக்கு வர வேண்டியது கட்டாயம்.
2.சுனில் நரையினை விரைவிலேயே ஆட்டமிழக்கச் செய்வது
கொல்கத்தா அணியின் மிகப்பெரிய பலமே தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான ஸ்கோரை குவித்து விட்டு செல்வதுதான். எனவே பவர் பிளேவிற்கு முன்னதாகவே சுனில் நரேனை தூக்க திட்டங்கள் வகுக்க வேண்டிய அவசியம். மேலும் சென்னை அணியை பொறுத்த வரை பவுலிங் என்பது சுமாரான ஒன்றாகவே இருக்கிறது. மேலும் கடந்த போட்டியில் பத்திரானா காயம் காரணமாக விளையாடவில்லை. எனவே கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடுவாரா? என்று சந்தேகமான நிலையிலே உள்ளது. முஸ்தபிக் ரகுமான் இன்னமும் சென்னை திரும்பாததால் அவரும் இந்த போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
3.சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவது
சிஎஸ்கேவை பொருத்தவரை சுழற் பந்துவீச்சு என்பது மற்றொரு பலம். ஆனால் இதுவரை ருத்ராஜ் சுழற் பந்துவீச்சாளர்களை சரியான நேரத்தில் பயன்படுத்தவில்லை என்பதை தோல்வியின் இன்னொரு காரணியாக பார்க்கப்படுகிறது. ஜடேஜாவை தவிர மற்ற சுழற் பந்து வீச்சாளர்கள் அனைவரும் சரியான நேரத்தில் பயன்படுத்தப்படவில்லை. எனவே இதனை கருத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
இதையும் படிங்க:எங்கள் பேட்ஸ்மேன்கள் எங்களை வீழ்த்தி விட்டனர்.. ஓபனிங் நல்லாதான் இருந்துச்சு ஆனா.. தோல்விக்கு பின்னர் கில் பேட்டி
4.அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது அவசியம்
கடந்த போட்டிகளில் சென்னை அணி வீரர்கள் குறைவான பந்துகளை எதிர்கொண்டு அதிக ரன்களை அடிப்பதே வழக்கம். ஆனால் கடந்த இரண்டு போட்டிகளாக சிவம் துபே மற்றும் மகேந்திர சிங் தோனியை தவிர வேறு யாரும் அதிரடியாக விளையாடவில்லை. எனவே பேட்டிங்க்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில் சிஎஸ்கே வீரர்கள் பேட்டிங்கில் மீண்டெழுவது கட்டாயம். எனது தவறுகளை திருத்திக் கொண்டு சென்னை அணி போட்யிடில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

