MI vs DC.. 20000 டிக்கெடுகள் இலவசம்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று மாலை நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகள் மோதும் இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

இப்போட்டிக்காக இரண்டு அணிகளும் மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை விளையாடிய மூன்று போட்டியிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பரிதாபமான நிலையில் உள்ளது. அந்த அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக நட்சத்திர ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் காயத்திலிருந்து மீண்டு மும்பை அணியுடன் இணைந்துள்ளார்.

- Advertisement -

எனவே அவர் இன்று நடைபெற இருக்கும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்கு தயாராக மும்பை அணி வீரர்களுக்கு மனதளவில் சிறிது இடைவெளி கிடைத்துள்ளதால் நன்றாகவே தயாராக இருப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த போட்டியைப் போல் இல்லாமல் மும்பை அணி இந்த போட்டியின் மூலம் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ளது.

- Advertisement -

அதேபோல டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. இந்த சீசனில் தற்போது வரை ஒரே ஒரு வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. அந்த வெற்றி சென்னை அணிக்கு எதிரானது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே டெல்லி அணியில் உள்ள பிரச்சனைகளை களைந்து இந்த போட்டியில் வலுவாக மீண்டு வரும் என்று நம்பலாம்.

ஐபிஎல்-லை பொறுத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பசுமை திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் ஏதாவது ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சியை வீரர்கள் அணிந்து விளையாடுவார்கள். அதேபோல ராஜஸ்தான் அணி பெண்களைப் போற்றும் விதமாக நேற்று நடைபெற்ற போட்டியில் பிங்க் நிற ஜெர்சி அணிந்து வீரர்கள் விளையாடினார்கள். அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏதாவது ஒரு போட்டியை ESA தினமாக கொண்டாடும்.

- Advertisement -

இதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஆதரவற்ற 20000 குழந்தைகளுக்கு இப்போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பை வழங்கி இருக்கின்றது. இதை மும்பை அணி 2010ஆம் ஆண்டில் இருந்தே கடைபிடித்து வருகிறது. அதாவது மும்பையில் ஏதேனும் ஒரு போட்டியில் அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு தினமாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் போட்டிக்கு ஆப்பு.. குடிநீரை பயன்படுத்தியதா சின்னசாமி மைதானம்?. பசுமை தீர்ப்பாயம் கேள்வி

மேலும் வெற்றிக்காக இரண்டு அணிகளுமே மிக தீவிரமாக தயாராகி வருவதால், இந்த போட்டியில் ரசிகர்களுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிரடியில் சிறந்து விளங்கும் மும்பை அணியின் கையே இந்த போட்டியில் அதிகமாக ஓங்கி இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles