இந்தியாவில் வெற்றிகரமாக தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் வேளையில், நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி ரசிகர் ஒருவர் செய்த செயல் சிஎஸ்கே ரசிகர்களை கடுப்படையை வைத்திருக்கிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைக்க, 20 ஓவர்களில் சென்னை அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் சிவம் துபே 24 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.
பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18 ஓவர்களிலேயே இலக்கை சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க, அதற்கு பின்னர் வந்த கிளாஸன் 50 ரன்கள் குவித்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதன் மூலம் ஹைதராபாத் அணி நான்கு போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பேட் கம்மின்ஸ் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவேன் என்று கூறியிருந்தார். சொன்னதைப் போலவே இந்திய அணியை வீழ்த்தி மைதானத்தில் இருந்த அனைத்து இந்திய ரசிகர்களையும் அமைதிப்படுத்தி உலகக்கோப்பையும் வென்றார்.
தற்போது சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கம்மின் ஸ் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது, மைதானத்தில் இருந்த ஹைதராபாத் ரசிகர் ஒருவர், ஒரு மனித உருவம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோவானா சிங்கத்தின் புகைப்படங்களை கார்ட்டூன்கள் ஆக வரைந்து, அதில் மனித உருவம் சிங்கத்தைப் பார்த்து “உஷ்” என்று சொல்வதைப் போல வரைபடம் வரைந்து இருந்தார். அதாவது சன்ரைசர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை அமைதிப்படுத்தி விட்டதாக வரைபடத்தில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:கம்மின்ஸ் காட்டிய பெருந்தன்மை… தோனி வந்துட கூடாதுன்னு தான் அப்படி பண்ணிங்க.. கைஃப் விமர்சனம்.. நடந்தது என்ன.?
எல்லை மீறிய சன்ரைசர்ஸ் ரசிகர்களின் இத்தகைய செயலால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் தற்போது கடும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அதாவது உலகக் கோப்பையை வென்று நம்மை அமைதி படுத்தியவரின் செய்கையை வரைபடமாக வரைந்து அதில் மற்ற ரசிகர்களை அவமானப்படுத்துவது ஏற்புடையதக்கதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
SRH fan in Hyderabad last night. pic.twitter.com/uJEgpoKA9r
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 6, 2024

