தோல்வியில் இருந்து மீண்டு வர முடியும்.. நாங்கள் கடினமான அணி.. தோல்விக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா பேச்சு

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் வலுவாகக் கருதப்பட்ட அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி தான் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்திற்கு பிறகு அனைத்து கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களும் இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் கடினமாக இருக்கிறது. பேட்டிங், பந்து வீச்சு என்று இரண்டு துறைகளிலும் வலுவாக இருக்கிறது. மேலும் அந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா மீண்டும் திரும்பி தற்போது கேப்டன் ஆக பொறுப்பேற்றுள்ளதால் குஜராத் அணியைப் போன்று வெற்றிகரமாக வழி நடத்துவார் என்று நம்பப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்போது நிலைமையே தலைகீழாக இருக்கிறது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி அதற்கு அடுத்த போட்டியில் ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு பந்து வீச்சின் மூலம் 277 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி விட்டு கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுதான்.

- Advertisement -

மேலும் திறமையான பந்துவீச்சாளர்கள் இருப்பினும் அவர்களுக்கு சரியான நேரத்தில் பந்துவீச கொடுக்காதது மற்றும் கடந்த சீசனில் மும்பை அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஆகாஷ் மத்வால் போன்ற வீரர்களை வெளியில் உட்கார வைத்ததும் கேப்டன்சியில் ஹர்திக் பாண்டியா செய்த தவறுகள் ஆகும். மேலும் அணியில் உள்ள பிரச்சனைகளை உடனடியாக களைந்து வெற்றிப் பாதைக்கு திரும்பிச் செல்வது அவசியம்.

இந்த நிலை இப்படியே தொடருமானால் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாது. எனவே இந்த தோல்வி குறித்து அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா தனது அணி வீரர்கள் தோல்வியில் துவண்டு விடாமல் இருக்க நம்பிக்கையான வார்த்தைகளை கூறி வலுப்படுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்

- Advertisement -

“கடினமான வீரர்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள். இந்தத் தொடரில் நாம் மிகவும் கடினமான அணி. அந்தக் கடினமான வெற்றி இலக்கிற்கு மிகவும் அருகில் வந்தது நமது அணி மட்டுமே. நமது பந்துவீச்சாளர்கள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். யாரும் அந்த சூழ்நிலையை பார்த்து பதட்டம் அடையவில்லை. எல்லோரும் பந்து வீசவே விரும்பினர். அதை ஒரு நல்ல விஷயமாக நான் கருதுகிறேன் .

நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம் நல்லது கெட்டது என்று எது நடந்தாலும் அதை ஒன்றாக சமாளிப்போம்” என்று கூறியிருக்கிறார். கேப்டனாக சில குறைகள் இருப்பினும் தோல்வியில் துவண்டு விடாமல் தனது அணி வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய வார்த்தைகளை வெளிப்படுத்திய ஹார்திக் பாண்டியாவை தற்போது ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles