எப்பா என்ன அடி.! ஒரே போட்டியில் 523 ரன்கள்.. சிக்ஸர் மழையில் நனைந்த ராஜிவ் காந்தி ஸ்டேடியம்.. முழு விபரம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடர் எட்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 277 ரன்கள் குவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை முறியடித்தது.

- Advertisement -

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாசை இழந்த ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி ஹைதராபாத் அணியின் இன்னிங்சை உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி கதாநாயகன் டிராவிஸ் ஹெட் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடங்கினர். மயங்க் அகர்வால் ஒரு முனையில் நிதானம் காட்ட மறுமுனையில் டிராவிஸ் ஹெட் தனது அதிரடியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான பும்ராவைத் தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் அடித்து நொறுக்கினார். 16 பந்துகளில் அரை சதத்தினைக் கடந்த அவர் டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்து 24 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மயங்க் அகர்வால் 11 ரன்களில் வெளியேற அவரைத் தொடர்ந்து அபிஷேக் ஷர்மா களம் இறங்கினார்.

- Advertisement -

டிராபிஸ் ஹெட் 18 பந்துகளில் அரை சதத்தினை கடந்தால் அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் அரை சதத்தினைக் கடந்து ஹைதராபாத் அணிக்காக அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.23 பந்துகளில் 63 ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பிறகு வந்த மார்க்ரம் மற்றும் கிளாஸன் ஆகிய இருவரும் ஹைதராபாத் அணியின் ரன் ரேட் எங்கு ஆரம்பித்ததோ அது சற்றும் குறையாமல் அப்படியே எடுத்துச் சென்றனர்.

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கிளாசன் இந்த போட்டியில் அபாரமாக விளையாடி 34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதில் நான்கு பௌண்டரிகளும், ஏழு சிக்ஸர்களும் அடங்கும். இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த மார்க்ரம் 28 பந்தங்களில் 48 ரன்கள் குவித்தார். இதனால் ஹைதராபாத் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது.

- Advertisement -

228 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக இன்னிங்சைத் தொடங்கினார்கள். இசான் கிசான் 13 பந்துகளில் 34 ரன்களும், ரோஹித் சர்மா 12 பந்துகளில் 24 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

அதிகபட்சமாக திலக் வர்மா 34 வதுகளில் 64 ரன் ரன்ளும் டிம் டேவிட் 22 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். பின்னர் இறுதிக் கட்டத்தில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் மும்பை இந்தியன்ஸ் வேகத்தை கட்டுப்படுத்தியதால் அந்த அணியால் 20 ஓவர்களில் 246 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்தப் போட்டியில் மொத்தம் ஐபிஎல் வரலாற்றிலேயே இரு இன்னிங்ஸ் களையும் சேர்த்து 500 ரன்களுக்கு மேல் அடிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles