12 ரன்னை தாண்டாத 7 பேர்.. சேப்பாக்கில் சிஎஸ்கே மாஸ் ஆட்டம்.. குஜராத் பரிதாபம்.. புள்ளி பட்டியலில் கிடு கிடு உயர்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கும் இடையேயான ஏழாவது ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்திய உத்வேகத்தில் சென்னை அணியும், பலமான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் குஜராத் அணியும் களமிறங்கின.

- Advertisement -

மஞ்சள் படை நிரம்பி வழிந்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் காண்வேவிற்கு பதிலாக களம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.

- Advertisement -

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெளிப்பட்ட அதே வேகம் இந்த போட்டியிலும் காண முடிந்தது. 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்த நிலையில் எதிர்பாராத விதமாக ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்த போட்டிகளில் இவரிடம் இருந்து மிகப்பெரிய ரன்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கேப்டன் ருத்ராஜ் நிதானமாக விளையாடி 46 ரன்கள் குவிக்க, ஆல்ரவுண்டர் சிவம் துபே மிடில் ஓவர்களில் களமிறங்கி தனக்கு கொடுத்த வேலையை சரியாக செயல்படுத்தினார். குறைந்த பந்துகளை எதிர்கொண்டு ஐந்து சிக்சர்களை விளாசி அவர் 51 ரன்கள் குவித்தார். மற்றொரு இளம் வீரர் சமீர் ரிஸ்வி முதல் போட்டியில் வாய்ப்பு பெற்று இரண்டு சிக்ஸ்களை விளாசி 14 ரன்கள் குவித்தார்.

பின்னர் 207 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கில் 8 ரன்கள் குவித்த நிலையில் தீபக் சகாரின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சகா 21 ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் மட்டுமே நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

அவர் ஒரு முனையில் நிதானமாக நின்று விளையாட, மறுமுனையில் வந்த வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் நடையை கட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் 21 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார். சாய் சுதர்சனும் 37 ரன்களில் ஆட்டமிக்க இறுதியில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே குவித்தது. குஜராத் அணியில் குறிப்பாக ஏழு பேர் 12 ரன்கள் கூட தாண்டவில்லை. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணியை பொறுத்தவரை தீபக்சகர், முஸ்தபிர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்கள். இதன் மூலம் குஜராத் அணி தனது முதல் தோல்வியை சந்தித்து இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles