17 வது இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இந்த நிலையில் குஜராத் அணியின் பேட்டிங்கின் போது மகேந்திர சிங் தோனி ஒரு அற்புதமான கேட்ச்சை பிடித்து அசத்தியிருக்கிறார்.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்து இருந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ருத்ராஜ் மற்றும் ரட்ச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 46 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அதிலும் குறிப்பாக இரட்சின் ரவிந்த்ரா 20 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 46 ரன்கள் விளாசினார்.
மற்றொரு மூத்த அனுபவ வீரரான அஜின்கியா ரகானே 12 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு வந்த ஆல் ரவுண்டர் சிவம் துபே அதிரடியாக விளையாடி சென்னை அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார். வெறும் 23 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட அவர் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்களை விளாசி 51 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் டாரி மிச்சல் 20 பந்துகளில் 24 ரன்கள் குவிக்க இளம் வீரர் சமீர் ரிஸ்வி ரஷித் கானின் ஓவரில் இரண்டு சிக்சர்களை விளாசி 6 பந்துகளில் 14 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இந்நிலையில் அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் டேரி மிச்சல் வீசிய பந்தினை தமிழக வீரர் விஜய் சங்கர் எதிர் கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக பந்து விஜய் சங்கரின் பேட்டில் பட்டு பின்னால் விக்கெட் கீப்பருக்கு செல்ல அதனை மகேந்திர சிங் தோனி டைவ் அடித்து அற்புதமாக கேட்ச் செய்து அசத்தினார்.
தற்போது இவருக்கு வயது 42 ஆகி வரும் நிலையில் இவர் அடித்த டைவ் ஏதோ 25 வயது இளைஞன் போல அவ்வளவு அபாரமாக இருந்தது. மகேந்திர சிங் தோனி களத்திற்கு வந்தாலே கரகோஷம் எழுப்பும் ரசிகர்கள் தோனி இந்த கேட்ச் பிடித்ததை பார்த்ததும் மைதானமே அதிரும் அளவுக்கு கரகோஷம் நிரப்ப தொடங்கினார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது. இது எம் எஸ் தோனிக்கு கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் என்று பலர் கூறிவரும் நிலையில் இவரது பிட்னஸை பார்த்து தற்போது அனைவரும் வாயடைத்துப் போய் உள்ளனர்.
DHONI – AGE IS JUST A NUMBER.
— Johns. (@CricCrazyJohns) March 26, 2024
The Greatest ever. 🐐pic.twitter.com/r9PgSJmTCp

