17 வது ஐபிஎல் சீசன் தொடரில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து குஜராத் அணியின் பந்துவீச்சை நொறுக்கி இருக்கிறது.
டாசை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. போன ஆட்டத்தில் விட்ட பேட்டிங் ஃபார்மை ரச்சின் ரவீந்திரா இந்த ஆட்டத்தில் அப்படியே தொடர்ந்தார். முண்ணனி பந்து வீச்சாளர், சாதாரண பந்துவீச்சாளர் என யாருக்கும் பாகுபாடு காட்டாமல் அனைவரின் பந்துவீச்சையும் நாலா புறமும் அடித்து நொறுக்கினார்.
வெறும் 20 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் ஆறு பவுண்டரிகளையும், மூன்று சிக்சர்களையும் விளாசி எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் கேப்டன் ருத்ராஜ் நிதானமாக விளையாடி 36 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் அஜின்கியா ரஹானே 12 ரன்கள் எடுத்த நிலையில் சாய் கிஷோரின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய ஆல் ரவுண்டான சிவம் துபே மிகச் சிறப்பாக விளையாடி 23 பந்துகளில் இரண்டு பவுண்டரி ஐந்து சிக்சர்கள் என விளாசி 51 ரன்கள் குவித்த நிலையில் ரசித் கானின் பந்துவீச்சு ஆட்டம் இழந்து வெளியேறினார்.
பின்னர் சிவம் தூப ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு கடைசி மூன்று ஓவர்கள் இருந்த நிலையில் மகேந்திர சிங் தோனிதான் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மினி ஏலத்தில் 8.5 கோடிக்கு வாங்கப்பட்ட இளம் வீரர் சமீர் ரிஸ்வி களம் இறங்கினார். முந்தைய போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத இவருக்கு இந்த போட்டியில் நல்ல வாய்ப்பாக அமைந்தது.
ரஷித் கானின் ஓவரில் தான் எதிர்கொண்ட முதல் பந்தையே லெக் சைடு சிக்ஸருக்கு தூக்கி விளாசி தனது வருகையை சென்னை அணிக்கு ஆணித்தரமாக பதிவு செய்தார். ஒரு முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக பேட்டிங் செய்யப் போகிறோம் என்ற எந்தவித சலனமும் இன்றி இளங்கன்று பயமறியாது என்பதைப் போல இவரின் அந்த சிக்சர் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.
பின்னர் அதே ஓவரின் கடைசி பந்தை நேராக லாங் ஆன் திசையில் ஒரு சிக்சரை விலாசினார். ஆறு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டவர் 14 ரன்கள் குவித்து இறுதிக்கட்டத்தில் தனது வேலையை மிக அற்புதமாக செய்து முடித்து வெளியேறி இருக்கிறார் இந்த இளம் வீரர்.
SAMEER RIZVI SMASHED RASHID KHAN FOR A SIX IN HIS FIRST BALL. 🔥pic.twitter.com/voISGlBpO5
— Johns. (@CricCrazyJohns) March 26, 2024

