எட்டாவது நிமிடம்.. ஜடேஜாவுக்கு காத்திருக்கும் அதிசயம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

17 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வெற்றி பெற்று இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப் போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில் போட்டியின் ஒரு முக்கிய நிகழ்வாக ஜடேஜாவுக்காக ரசிகர்கள் மரியாதை செய்ய காத்திருக்கின்றனர்.

- Advertisement -

கடந்த ஆண்டு இதே அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் சென்னை அணி வெற்றி பெற இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா அணியின் ஆபத்பாந்தவனாக நின்று மோகித் சர்மா வீசிய ஐந்தாவது பந்தில் ஒரு சிக்சர், ஆறாவது பந்தில் ஒரு பவுண்டரி என சிறப்பாக விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இதன் மூலம் நான்கு ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ள சென்னை அணி ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தினால் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. எம் எஸ் தோனி கேப்டனாக வெளியேறும் தருவாயில் சென்னை அணிக்காக ஒரு கோப்பையை பெற்றுக் கொடுத்திருக்கிறார். இதற்கு மிக முக்கிய காரணம் ஜடேஜாவின் அந்த சிறப்பான இன்னிங்ஸ்தான்.

அதற்குப் பிறகு மகேந்திர சிங் தோனி இந்த சீசனின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தனது கேப்டன்சியை விட்டு விலகுவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் அணியின் கேப்டன்சியை ஏற்று தற்போது வழி நடத்திக் கொண்டிருக்கும் ருத்ராஜ் முதல் போட்டியில் அற்புதமாக செயல்பட்டு பெங்களூர் அணியை வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இதே மைதானத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் நிலையில் இறுதிப் போட்டியில் ஜடேஜாவின் இன்னிங்சை நினைவுபடுத்தும் விதமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் எட்டாவது நிமிடத்தில் எழுந்து நின்று ஜடேஜாவுக்காக மரியாதை செய்ய காத்திருக்கிறார்கள்.

அது ஏன் அந்த எட்டாவது நிமிடம் என்றால் ஜடேஜாவின் ஜெர்சி நம்பர் எட்டு. இதனால் சென்னை அணி ரசிகர்கள் எட்டாவது நிமிடத்தில் அவருக்கு மரியாதை செய்ய காத்திருக்கிறார்கள். கடந்த சீசனில் ஜடேஜா எப்பொழுது அவுட் ஆவார் எம்.எஸ். தோனி எப்பொழுது பேட்டிங் செய்ய களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில் அந்த ஒரே ஒரு இன்னிங்ஸ் மூலம் சென்னை அணி ரசிகர்கள் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளார் ஜடேஜா. எனவே இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து அனைத்து ரசிகர்களும் தற்போது காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles