280 ஸ்ட்ரைக் ரேட்.. ஆர்சிபி-யை ஜெயிக்க வைத்த தினேஷ் கார்த்திக்.. பஞ்சாப் கிங்ஸ் பரிதாபம்

17வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.இதில் நடைபெற்ற ஆறாவது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் குவித்தார். 37 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை விளாசினார்.

- Advertisement -

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பேர்ஸ்டோ எட்டு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும், அதற்கு அடுத்ததாக களமிறங்கிய ப்ரப்சிம்ரன் 17 பந்துகளில் இரண்டு பவுன்டரி, இரண்டு சிக்சர் என 25 ரன்கள் விளாசினார். பின்னர் களம் இறங்கிய ஷாம்கரன் 17 பந்துகளில் 23 ரன்களும், ஜித்தேஷ் ஷர்மா 27 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்ஷாக் சிங் 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 1 போர், இரண்டு சிக்சர்கள் என விளாசி 21 ரன்கள் குவித்தார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி ஒருவரைத் தவிர பின்னர் வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். குறிப்பாக அணியின் கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் மூன்று ரன்களிலும், ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மூன்று ரன்களிலும், மேக்ஸ்வெல் 3 ரன்களிலும், அனுஜ் ராவத் 11 ரன்களிலும் வெளியேறினார்.

- Advertisement -

பின்னர் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக விளையாடிய அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இளம் வீரரான லோம்ரார் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்தனர். சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 280 ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெறும் 10 பந்துகளில் மூன்று பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் என 28 ரன்கள் விளாசினார்.மற்றொரு வீரரான லோம்ரோர் 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 17 ரன்கள் விளாசினார்.

இதனால் பெங்களூர் அணி 19.2வது ஓவரில் 178 ரன்கள் குவித்து நான்கு பந்துகளை மீதம் வைத்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது அடுத்து தனது சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. பஞ்சாப் அணி முதல் போட்டியில் டெல்லி அணியுடன் வெற்றி பெற்றதை அடுத்து பெங்களூர் அணியுடன் தோல்வியை சந்தித்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles