இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்ற இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் முன்னேறும். தற்போது இந்தியாவில் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் முதல் கால அட்டவணையை மட்டுமே முதலில் வெளியிட்டிருந்தது. பின்னர் தேர்தல் ஆணையத்திடம் கலந்து ஆலோசித்து விட்டு இரண்டாவது கால அட்டவணையை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் இரண்டாவது கால அட்டவணையின் படி போட்டி நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக இருக்கும் என கருதி துபாய் சென்ற பிசிசிஐ அதிகாரிகள் அங்குள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். அங்கும் நிலைமை சரியாக இல்லாத காரணத்தினால் 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போதிலும் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் பாதுகாப்பாக நடத்தப்பட்டன.
அதே போல இந்த முறையும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நடக்க இருக்கும் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யலாம் என்று பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது. எனவே அதற்கான அட்டவணையை சீர்திருத்தி விரைவில் வெளியிடுவோம் என்று அறிவித்த நிலையில் முழு தொடருக்கான அட்டவணையையும் தற்போது வெளியிட்டு இருக்கிறது.
இதில் சென்னை ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி என்னவென்றால் பிளே ஆப் சுற்றின் இரண்டாவது போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஆகிய இரண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. லீக் சுற்றில் ஏழு போட்டிகள், பிளே ஆப் சுற்றில் இரண்டு போட்டிகள் என ஒன்பது போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் லீக் போட்டிகளைத் தவிர பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டி வழக்கமாக மும்பை அல்லது குஜராத் மைதானத்தில் நடைபெறும். இம்முறை அங்கு நடக்க உள்ள லோக்சபா தேர்தலின் காரணமாக தற்போது போட்டிகள் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாகும் நிலையில், அதற்கான தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எனவே சென்னை ரசிகர்கள் தங்கள் ஆஸ்தான நாயகன் மகேந்திர சிங் தோனியை சென்னை மைதானத்தில் ஒன்பது போட்டிகளில் கண்டுகளிக்கலாம். இதன் முழு போட்டிகளுக்கான அட்டவணை:
The wait is finally over! 😍
— Star Sports (@StarSportsIndia) March 25, 2024
Here's the complete TATA #IPL2024 schedule! Mark your calendars 📅 and don't miss out on the non-stop cricket excitement 🔥
Tune-in to #IPLOnStar, LIVE, Only on Star Sports pic.twitter.com/9XopOFs6ir

