36 பந்து 47 ரன்.. 12 வருட ஏமாற்றம்.. சோக் செய்த மும்பை இந்தியன்ஸ்.. கில் அபார கேப்டன்சியில் குஜராத் பதிலடி

ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக சகா மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினர். சிறிது அதிரடியாக விளையாடிய சகா 19 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் கில் 31 ரன்களில் வெளியேற, பின்னர் களம் இறங்கிய தமிழக வீரர் சாய் கிஷோர் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

ஒரு முனையில் சாய் கிஷோர் சிறப்பாக விளையாடினாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்த வண்ணம் இருந்தன. பின்னர் இறுதிக்கட்டத்தில் ராகுல் தெவாட்டியா அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 22 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிய சாய் கிஷோர் 45 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. மும்பை அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா நான்கு ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 169 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது.

இசான் கிசான் டக் அவுட் ஆகி வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடினார். 43 ரன்கள் குவித்த அவர் சாய் கிஷோர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ப்ரெவிஸ் 38 பந்துகளில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்ஸர்களுடன் 46 ரன்கள் குவித்தார். 36 பந்துகளில் 47 ரன்கள் தேவைபட்டது. அப்போது திலக் வர்மா மற்றும் ப்ரெவிஸ் ஆகியோர் களத்தில் இருக்கும் வரை மும்பை அணிக்கே வெற்றி என்று தான் தோன்றியது.

- Advertisement -

அதன் பிறகு இவர்கள் இருவரும் ஆட்டம் இழக்க, அதன் பிறகு குஜராத் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்து வீசி மும்பை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். இருப்பினும் இறுதிக்கட்டத்தில் ஆறு பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தார். உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்தினை சிக்சர் விளாசிய அவர் இரண்டாவது பந்தை பவுண்டரி விளாசினார்.

இதனால் 9 பந்துகளில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மூன்றாவது பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் நான்காவது பந்தில் பியூஸ் சாவ்லாவும் ஆட்டம் இழந்து வெளியேற, குஜராத் அணியின் வெற்றி உறுதியானது. 12 வருடங்களாக முதல் போட்டியில் வெற்றி பெறாத மும்பை அணியின் பரிதாபம் தற்போதும் நீடிக்கிறது. ஒரு கட்டத்தில் மும்பை அணிதான் வெற்றி பெறும் என்ற நிலையில் குஜராத் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles