300 நாட்கள்.. பேட்டிங் வராத தோனி.. ஒரு ஐபிஎல் விதியால் வந்த வினை.. இனியாவது வாய்ப்பு இருக்கா.?

17 வது ஐபிஎல் சீசன் தொடர் வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சீசனின் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் களமிறங்கின. இப்போடியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும், சென்னை ரசிகர்களுக்கு எதிர்பார்த்த ஒன்று நிறைவேறவில்லை.

- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நேற்று தொடங்கிய முதல் போட்டியில் ருத்ராஜ தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இரு அணியிலும் மிகப்பெரிய நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில் இப்படி அனைவருக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

பெங்களூர் அணியிலும் விராட் கோலி இந்திய அணில் இருந்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் பெங்களூரு அணிக்கு திரும்பியிருக்கிறார். எனவே இவரது பேட்டிங்கைக் காண பெங்களூர் ரசிகர்கள் மட்டும் இன்றி சென்னை அணி ரசிகர்களும் எதிர்பார்த்து இருந்தனர். நேற்றைய போட்டியில் விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர் களத்தில் நின்ற நேரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

- Advertisement -

பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 173 ரன்கள் குவித்தது. பின்னர் அடுத்தது களமிறங்கிய சென்னை அணி 19 வது ஓவரில் பெங்களூர் அணி நிர்ணயித்த இலக்கை எட்டி இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இருப்பினும் சென்னை அணி ரசிகர்களுக்கு இப்போட்டி சற்று ஏமாற்றமாகவே அமைந்திருக்கிறது.

ஏனென்றால் கடந்த ஐபிஎல் சீசனில் பங்கு பெற்ற மகேந்திர சிங் தோனி அதன் பிறகு கிட்டத்தட்ட 300 நாட்கள் கழித்து மீண்டும் சென்னை அணையில் இணைந்திருக்கிறார். எனவே பெரும்பாலான சென்னை ரசிகர்கள் சென்னை அணி வெற்றி பெறுவது மட்டுமின்றி மகேந்திர சிங் தோனியின் பேட்டிங்கைக் காண வேண்டும் என்பதற்காகவே மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

அதற்கு நல் வாய்ப்பாகவே சென்னை அனிலும் நான்கு விக்கெட்டுகள் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் விழுந்தது. அதன் பிறகு மகேந்திர சிங் தோனி களம் இறங்குவார் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வகையில் இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக சிவம் துபே களம் இறங்கினார். அதன் பிறகு விக்கெட்டுகள் விழாததால் நான்கு விக்கெட்டுகளிலேயே சென்னை அணியை வெற்றியை பதிவு செய்தது.

கிட்டத்தட்ட ஒரு வருட காலம் காத்திருந்து மகேந்திர சிங் தோனியின் பேட்டிங்கை காண எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்போட்டி சற்று ஏமாற்றமாகவே அமைந்திருக்கிறது. இந்த ஐபிஎல் விதியால் தங்கள் நட்சத்திரத்தின் பேட்டிங்கை காண முடியவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். எனவே இனியாவது தோனியின் பேட்டிங் பார்க்க முடியுமா? என்று ஏங்கியும் வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles