ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை சென்னையில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியாகி ரசிகர்கள் பெற்று வருகின்றனர்.
டிக்கெட்களுக்கான மினிமம் விலை 1700 ஆகவும், அதிகபட்ச விலை 15 ஆயிரம் ஆகும் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ரசிகர்கள் தங்களது வசதிகளுக்கு ஏற்ப டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக்கிங் செய்துள்ளனர். எனவே சென்னை மாநகரமே தற்போது கோலாகலமாக இருக்கும் வேளையில்,மேலும் தமிழக அரசு ரசிகர்களை குஷிப்படுத்த ஒரு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது.
அதாவது போட்டியைக் காண வரும் ரசிகர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. தோனி மற்றும் கோலியைக் காண அதிகளவு ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசு இச்செய்தியை அறிவித்துள்ளது.
அதாவது போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளைக் காண நேரில் வரும் ரசிகர்கள் மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம்.அதற்கு முக்கியமாக டிக்கெட்டுகள் புக்கிங் செய்ததற்கான ஆதாரங்கள் அல்லது பிரிண்ட் டிக்கெட் போன்ற நகலை ஏதாவது வைத்திருக்க வேண்டும்.
போட்டியைக் காண வருவதற்கான சான்று ஏதாவது இருந்தால் மட்டுமே பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய முடியும். இது போட்டி நடைபெறும் நேரத்திற்கு சரியாக மூன்று மணி நேரத்துக்கு முன்னரும், போட்டி நடைபெற்றதற்கு பிறகு மூன்று மணி நேரமும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். இது போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் நடத்துனரும், டிக்கெட் வைத்துள்ளதை உறுதிப்படுத்திய பின்னரே பேருந்தில் ஏற அனுமதிப்பார். எனவே ரசிகர்கள் டிக்கெட்டினை கொண்டு வருவது கட்டாயம். ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிகழ்ச்சிகளுக்கு பின்னர் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் பெங்களூர் அணிகளில் கோலி,தோனியைத் தவிர மேக்ஸ்வெல், டுபிளஸ்சிஸ், ரகானே, ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்களும் இருப்பதால் போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
This is a wonderful initiative from CSK. Fans can use match tickets and travel by metro at no additional cost. There will be a feeder bus from Govt Estate Metro to the stadium. Metro service extended by 90 mins on match days. Helps save parking issues as well. pic.twitter.com/VSxtGe4ACX
— Venkata Krishna B (@venkatatweets) April 1, 2023

