ராயுடு, கான்வே இல்லைனா என்ன.. இந்த ஜூனியர்ஸ நா உருவாக்கறேன்.. கவலைய விடுங்க.. பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி அதிரடி

17வது ஐபிஎல் சீசன் தொடர் வருகிற 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னையுடன் பெங்களூர் அணி மோத உள்ளது. தற்போது இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், சில வீரர்களின் காயங்கள் அணிக்கு பின்னடைவாக அமைந்து விடுகிறது.

- Advertisement -

ஒரு வீரருக்காக அதிக செலவு செய்யும் அணிகள், அந்த வீரர் காயம் அல்லது வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினால் அது அணிக்கு பெரும் பின்னடைவாகவே அமைந்து விடும். எனவே போட்டி தொடங்கும் வரை அணி வீரர்கள் காயங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

- Advertisement -

கடந்த 2023ஆம் ஆண்டு சீசனோடு சென்னை அணியின் மூத்த வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்று விட்டார். அவரது இடத்தை நிரப்பவே சமீபத்தில் ஏலத்தில் கலந்து கொண்ட சென்னை அணி நியூசிலாந்தின் அதிரடி வீரர் டேரி மிச்சலையும், இந்திய அணியில் அறிமுகமாகாத சமீர் ரிஸ்வியையும் வாங்கியது.

- Advertisement -

அவரது இடத்திற்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் என்று கொண்டாட்டத்திலிருந்த சென்னை அணிக்கு எதிர்பாராத விதமாக அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே காயத்தினால் வெளியேறினார். எட்டு வாரங்கள் வரை விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்ட கான்வே அதற்குப் பிறகும் சென்னை அணிக்கு கிடைப்பாரா? என்பது சந்தேகமே.

எனவே இந்த இரு இடங்கள் நிரப்பப்படுவது குறித்து பேசிய சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி இந்த இரு பொசிஷன்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும், அதற்குத் தகுந்த மாற்று வீரர்களை உருவாக்குவது தான் சென்னை அணியின் வேலை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே இது குறித்து அவர் கூறியதாவது

- Advertisement -

“அம்பத்தி ராயுடு இடத்தில் விளையாட சமீர் ரிஸ்வி நல்ல தேர்வாக இருக்கிறார். அம்பத்தி ராயுடு அணியின் மூத்த அனுபவ வீரர். சமீர் ரிஸ்வி இப்பொழுது தான் தனது ஐபிஎல் வாழ்க்கையை துவங்கப் போகிறார். எனவே அவரிடம் எடுத்ததுமே ராயுடு போல எதிர்பார்க்கக் கூடாது. மேலும் அவரிடம் நல்ல அதிரடி இருக்கிறது.

இயற்கையாகவே அவரிடம் அதிரடி ஷாட்கள் இருப்பதால், அவரை கவனமாக உருவாக்கலாம். மேலும் அவர் சென்னை அணிக்காக நல்ல இன்னிங்ஸ்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்ததாக கான்வே இடத்திற்கு ரச்சின் ரவீந்திரா நல்ல தேர்வாக இருக்கிறார். அவரிடம் நல்ல பேட்டிங் தொழில்நுட்பம் இருக்கிறது. அவருடன் வேலை செய்யவும் ஆர்வமாக உள்ளேன். எனவே இவர்கள் இருவருடன் நான் வேலை செய்ய விரும்புகிறேன். மற்றும் இன்னொரு தேர்வாக ரஹானேவும் இருக்கிறார். இந்த இரு வீரர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்யலாம்.

இருப்பினும் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. எனவே அனைவரின் ஆலோசனையின் படி திட்டமிடப்பட்டு சரியான வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். எனவே மாற்று வீரர்கள் குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles