கொஞ்சம் எல்லை மீறிதான் போறாங்களோ.. மைதானத்தில் பூஜை வழிபாடு.. அதகளம் பண்ணும் கேகேஆர்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

17வது ஐபிஎல் சீசன் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கொல்கத்தா அணி வீரர்கள் மைதானத்தில் செய்த சம்பவம் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் களமிறங்க உள்ளன. இதற்கான மைதானத்தைத் தயார் படுத்தும் வகையில் நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல வருகிற 23ஆம் தேதி கொல்கத்தாவில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.

- Advertisement -

இதற்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் இம்முறை செயல்பட இருக்கிறார். முன்பு லக்னோ அணிக்காக ஆலோசராக செயல்பட்டு வந்த கம்பீர் கொல்கத்தா அணையின் உரிமையாளர் ஷாருக்கான் அழைப்பின் பேரில் தற்போது கொல்கத்தா அணிக்காக செயல்பட இருக்கிறார்.

- Advertisement -

இவர் முன்னர் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு அந்த அணி சாம்பியன் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியின் சமீபத்திய செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதால், கௌதம் கம்பீரை ஆலோசகராக நியமித்திருக்கிறது.

இந்நிலையில் கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணியினருடன் இணைந்துள்ளார். தற்போது அணி வீரர்களும் பயிற்சி முகாமில் தங்கள் பயிற்சியைத் தொடங்கிவிட்டனர். கடந்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் ஆன ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஸ்டார்க் (24.75 கோடி) அணியினருடன் இணைந்து தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இந்த பயிற்சிக்கு முன்பாக கொல்கத்தா அணி வீரர்கள் நிர்வாகிகள் என அனைவரும் இணைந்து ஸ்டம்ப்புகளில் பூ, மாலை மற்றும் வழிபாட்டுப் பொருட்கள் வைத்து மைதானத்தில் பூஜை செய்து உள்ளனர். இதனால் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பூஜை செய்து முடித்த பின்னர் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் தனது பயிற்சி தொடங்கி இருக்கிறார்.

இதற்கு முன்னதாகவே மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பயிற்சி தொடங்குவதற்கு முன்னர் சூடம் ஏற்றி ஆரம்பித்து வைத்துள்ளார். மேலும் அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்துள்ளார். தற்போது அதனையே பின்பற்றி கே கே ஆர் அணி ஒரு படி மேலே சென்று தங்களது வழிபாட்டினை நிறைவு செய்துள்ளது. எனவே இவ்விரு அணிகளைப் பின்பற்றி மற்ற அணிகள் வழிபாட்டை தொடங்கினாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே இந்த ஐபிஎல் தொடர் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை என்று இப்போதே தெரிகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles