பெயரை மாற்றப் போகும் ஆர்சிபி.. கண்ணாடிய திருப்புனா எப்படி வண்டி ஓடும்.. ட்ரோல் செய்து வரும் ரசிகர்கள் காரணம் என்ன?

ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆதிக்கம் செலுத்தும் இரு அணிகளான சென்னை மற்றும் மும்பை தலா ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

- Advertisement -

இதில் மூன்றாவது பலமான அணியாகக் கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒரு கோப்பையைக் கூட வென்றதில்லை என்ற வரலாற்று சோகம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐபிஎல்லில் இதுவரை மூன்று முறை இறுதிப் போட்டியில் முன்னேறி ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. அனில் கும்ப்ளே, டானியல் வெட்டோரி, ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி என அனைத்து கேப்டன்களும் பெங்களூரு அணியை வழிநடத்தி விட்டனர்.

- Advertisement -

ஆனால் இன்னமும் கோப்பை வந்த பாடு இல்லை. அதுவும் கடந்த ஏழு ஆண்டுகளாக பெங்களூர் அணி ஒருமுறை கூட இறுதி போட்டிக்கு வரவில்லை என்ற சோகமும் நீடிக்கிறது. எனவே இந்த சோகங்களுக்கு முடிவு கட்டவும், கோப்பையை வெல்லவும் ஒரு புதிய யுத்தியை கையாண்டு இருக்கிறது பெங்களூர் அணி. இது இதற்கு முன்னரே பல அணிகள் கையாண்ட அதே முறை தான்.

- Advertisement -

வருகிற மார்ச் 19ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது அணியின் பெயரை மாற்ற இருக்கிறது. இதற்காக புகழ்பெற்ற காந்தாரா படத்தின் இயக்குனரும், நடிகருமான ரிஷப் செட்டியை வைத்து விளம்பரம் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள். அந்த விளம்பரத்தில் மூன்று மாடுகளின் மீது போர்வை போத்தப்பட்டிருக்கிறது. அதில் ஒரு மாட்டின் மீது ‘ராயல்’ என்றும் மற்றொரு மாட்டின் மீது ‘சேலஞ்சர்ஸ்’ என்றும் மற்றொரு மாட்டின் மீது ‘பெங்களூர்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

இதில் பெங்களூர் என்று பெயர் எழுதி இருக்கிற மூன்றாவது மாட்டை மட்டும் ரிசப் செட்டி விரட்டி அடித்து இப்போது புரிகிறதா? என்று கேட்கிறார். அதாவது பெங்களூர் என்ற பெயரை ‘பெங்களூரு’ என மாற்றப் போவதாக சூசகமாக கூறி இருக்கிறார்கள். அதாவது 2008 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர் என்று இருந்தது. அதனால் அணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

பின்னர் 2014 ஆம் ஆண்டு பெங்களூர் என்ற பெயரை கர்நாடக அரசு பெங்களூரு என்று மாற்றியமைந்தது. இதனை ஆர்சிபி அணி 2014 ஆம் ஆண்டிலேயே செய்திருக்க வேண்டும். ஆனால் அப்போது கண்டுகொள்ளாத பெங்களூர் அணி நிர்வாகம் தற்போது தொடர்ந்து வரும் தோல்விகளால் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வருகிற மார்ச் 19ஆம் தேதி முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த செய்தியை அறிந்த மற்ற அணி ரசிகர்கள் அணியை சீரமைக்காமல் பெயரை மாற்றம் செய்தால் மட்டும் டைட்டிலை வென்று விட முடியுமா?, கண்ணாடி திருப்புனா எப்படி வண்டி ஓடும் என்று ட்ரோல் செய்து வருகின்றனர். இருப்பினும் பெங்களூர் அணி ரசிகர்கள் இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என வேண்டிக் கொள்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles