என் மகளுக்கு இந்த பணம் உதவும்.. கஷ்டம் தீர்ந்தது.. சிஎஸ்கே 14 கோடி குறித்து டேரல் மிட்செல் கருத்து

ஐபிஎல் மினி ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டேரல் மிட்செல் 14 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் டாரல் மிட்செல் பென் ஸ்டோக்ஸ் நல்ல மாற்றாக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். டாரல் மிட்செல் நடந்து முடிந்த உலக கோப்பையில் 500 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இதன் மூலம் கடந்த ஏலத்தில் விலை போகாமல் இருந்த டாரல் மிட்செல் தற்போது கோடீஸ்வரனாக மாறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டாரல் மிட்செல் இந்தப் பணம் என்னுடைய குடும்பத்திற்கு பல விதத்தில் உதவும் என்று கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் இன்று எனது மகளின் பிறந்தநாள். ஏலத்தில் எனது பெயர் இருந்ததால் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன்.

- Advertisement -

ஏலத்தில் எனது பெயர் எப்போது வரும் என்று எனக்கு தெரியவில்லை. திடீரென்று என் பெயர் வந்தது பிறகு ஒவ்வொருவராக ஏலம் கேட்க தொடங்கியவுடன் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.ஆனால் இவ்வளவு கோடி ரூபாய்க்கு நான் செல்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

- Advertisement -

அதுவும் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளது நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். சிஎஸ்கே உடன் எனது நாட்களை கழிக்க மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன். ஏலத்தில் நான் எடுக்கப்பட்ட பிறகு சிஎஸ்க அணி நிர்வாகம் சார்பாக எனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது.

இது உண்மையா இல்லையா என்று நானே என்னை கிள்ளி கொண்டு பார்த்தேன். இந்த பணம் எங்களுடைய குடும்பத்திற்கு பல வழிகளில் உதவும். என்னுடைய மகளின் வாழ்க்கைக்கு இந்த பணம் உதவிகரமாக இருக்கும். என்னுடைய மகளுக்காக தான் நான் கிரிக்கெட்டை விளையாடுகிறேன்.

- Advertisement -

தற்போது இந்த பணத்தை வைத்து அவர் நினைத்ததை எல்லாம் என்னால் செய்ய முடியும் அதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. பிளமிங் நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரராக இருந்தவர். தற்போது அவர் பயிற்சியாளராக இருக்கும்போது நான் நிறைய விஷயம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும்.
மேலும் நானும் சாண்ட்னரும் 12 வயதிலிருந்து ஒன்றாக தான் வளர்கிறோம். மேலும் நியூசிலாந்து வீரர்கள் அணியில் இருப்பதால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது .

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles