ஆசிய கோப்பை.. கோப்பையை வென்றும் வாங்க மறுத்த இந்திய வீராங்கனைகள்.. என்ன காரணம்.. பரிசளிப்பில் நடந்த சம்பவம்

இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி ஆசியக் கோப்பையை வென்ற நிலையில், பரிசளிப்பு நிகழ்ச்சியில் எதிர்பாராத சம்பவம் நடந்தது. போட்டியில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய வீராங்கனைகள், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் பரிசளிப்பு நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

- Advertisement -

இதற்கு முன்பாக கடந்த ஆண்டு இந்திய ஆடவர் அணியும் இதேபோன்ற முடிவை எடுத்திருந்தது. ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு கோப்பையை வழங்க மொஹ்சின் நக்வி வந்தபோது, இந்திய வீரர்கள் அவரிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளாமல் இருந்தனர். அதன் பின்னர் கோப்பை வீரர்களிடம் நேரடியாக வழங்கப்படாததால், இந்திய அணி கோப்பையுடன் புகைப்படம் எடுக்காமலேயே கொண்டாட்டத்தை முடித்தது.

- Advertisement -

இந்நிலையில், மகளிர் அணியும் ஆடவர் அணியின் அதே நிலைப்பாட்டை பின்பற்றியுள்ளது. இந்திய அணியின் இந்த முடிவு குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா விளக்கம் அளித்துள்ளார். “அவரிடம் இருந்து நாங்கள் கோப்பையை பெற்றுக்கொள்ள முடியாது” என்பதே இந்திய அணியின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles