நான் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேனு நினைச்சீங்களா.? இதுக்காக தான் நான் கிரிக்கெட்டுக்கே வந்தேன் – திலக் வர்மா அதிரடி

இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துள்ள திலக் வர்மா, தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவை வெளிப்படுத்தியுள்ளார். துலீப் டிராபி அரையிறுதியில் தென் மண்டல அணியை சிறப்பாக வழிநடத்திய அவரது பேட்டிங் மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

- Advertisement -

வடக்கு மண்டலத்திற்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்த திலக், இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் சேர்த்து தென் மண்டல அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் தென் மண்டலம் துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து திலக் வர்மா கூறுகையில், “நான் எப்போதுமே சிவப்புப் பந்து கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன். இந்தியாவுக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானது கடவுளின் திட்டம். ஆனால் என் உண்மையான பலம் சிவப்புப் பந்து கிரிக்கெட்தான். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் சிவப்புப் பந்து போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பிடிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா தற்போது நட்சத்திர வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles