இவரின் சேவை இனி போதும்.. ஜடேஜாவை ஓரங்கட்ட வேண்டிய நேரமா? முன்னாள் வீரர் சொன்ன பரபரப்பு கருத்து

ரவீந்திர ஜடேஜாவின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தற்போது புதிய விவாதம் கிளம்பியுள்ளது. இலங்கைக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்திய அணி அடுத்த தலைமுறை சுழற்பந்து வீச்சாளர்களை நோக்கி நகர வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -


37 வயதான ஜடேஜா, இலங்கை தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக கொழும்பு டெஸ்டில் இலங்கையின் கீழ்வரிசை வீரர்களை விரைவாக வீழ்த்த இந்திய அணி தடுமாறியது இந்த விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -


இதுகுறித்து தீப் தாஸ்குப்தா கூறும்போது “இப்போது இந்திய டெஸ்ட் அணி ஜடேஜாவைத் தாண்டி அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்” என்ற வகையில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles