சிஎஸ்கே கேப்டன் பதவி பறிப்பா?. தொடர் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம்.. பயிற்சியாளர் கூறுவது என்ன.?

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் இந்தத் தொடரில் ஏழாவது தோல்வியை சந்தித்திருக்கும் சிஎஸ்கே தற்போது தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. தொடர்ச்சியாக சிஎஸ்கே மூன்றாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தடுமாறி வருகிறது.

- Advertisement -

தற்போது சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ருத்ராஜ் கெய்க்குவாட் பேட்டிங்கிலும் மோசமாக தடுமாறி வருகிறார். மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் திருப்திகரமாக இல்லை. இந்த சூழ்நிலையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அவரது தலைமையில் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு போகாமல் இருப்பதால் அவரது கேப்டன்ஷிப் பதவி பறித்து சாம்சனுக்கு கேப்டன் பதவியை ஒப்படைக்க வேண்டும் என்கிற வகையிலான விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன.

- Advertisement -

இது குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறும்போது ” உலகம் கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு பிறகு புதிய ஒருவர் கேப்டன் பொறுப்பை எடுத்து வழி நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அவர் கடினமாக உழைக்கக் கூடிய வீரராக இருக்கிறார். மேலும் அனைத்து வீரர்களும் அவருக்கு உரிதான மரியாதையை கொடுக்கிறார்கள். மேலும் அவர் மீது எங்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. தன் தவறுகளை சரி செய்து வரும் காலத்தில் அவர் சிறந்த கேப்டனாக வருவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் எங்களுக்கு இல்லை” என்று அவருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles