19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் வலுவாக களம் இறங்குகிறது. எப்போதுமே சுழற்பந்து வீச்சில் சிறந்து விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறையும் நூர் அகமது மற்றும் அக்கீல் ஹுசென் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களோடு களமிறங்குகிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2018ஆம் ஆண்டு கால கட்டத்தில் விளையாடிய இந்திய அணியின் பவுலர் ஹர்பஜன் சிங், தற்போது இந்திய அணியின் முக்கியத்தூணாக விளங்கும் வரும் சக்கரவர்த்தியை அப்போதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்குமாறு கூறியதாக தற்போது தெரிவித்திருக்கிறார். ஆனால் சென்னை அணி அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் அவர் திறமையை பயன்படுத்திய கொல்கத்தா அவரை வாங்கி விட்டது எனவும் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே வலை பயிற்சி போது அவரை பார்த்தேன். அவரது பவுலிங் திறமையை கண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரை எடுக்குமாறு அணி நிர்வாகத்திடம் கூறினேன். ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. அதற்குப் பிறகு 2019ஆம் ஆண்டு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட வருண் ஒரு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு அதற்குப் பிறகு கொல்கத்தா அணிக்கு வாங்கப்பட்டார். தற்போது கொல்கத்தா அணியின் முக்கியத்தூணாக அவர் விளங்குகிறார். மேலும் அவர் இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளேவிடமிருந்து பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

