இன்று டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
இந்த போட்டியில் இன்று இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மேலும் இந்திய அணியின் தரப்பில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாமல் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியை களம் இறங்க உள்ளது.
அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் துவக்க ஆட்டக்காரர் கிங் நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு சுழல் பந்துவீச்சாளர் அகேல் உசைன் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அவர்களுடைய பௌலிங் யூனிட் மிகவும் வலிமையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாஸ் நிகழ்வில் சூரியகுமார் யாதவ் பேசும்போது “இங்கு இரவில் பனிப்பொழிவு வருகிறது என்பதால் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்ய இருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். பொதுவாக இந்த மைதானம் ரன் துரத்தலுக்கு மிகவும் சாதகமாக இருந்து வந்திருக்கிறது. எனவே நாங்கள் அதை செய்யப் போகிறோம். கடந்த போட்டியில் நாங்கள் எல்லா பக்கத்திலும் சிறப்பாகவே செயல்படும். எனவே அதே அணியுடன் விளையாடுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

