இலங்கை அணிய பார்த்து மனசு உடைஞ்சு போச்சு.. ஏமாற்றமா கோபமா எல்லாரும் இருக்காங்க.. நமக்கு தகுதி இல்லை – சங்கக்கரா வருத்தம்

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி இரண்டாவது சுற்று தங்கள் சொந்த மண்ணில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து படுதோல்விகள் அடைந்து அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது. இதன் காரணமாக இலங்கை நாடெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இலங்கை அணிக்கு எதிராக தங்களது விமர்சனத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக முன்வைத்து வருகிறார்கள்.

- Advertisement -

இலங்கை அணி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதற்குப் பிறகு அந்த அணி எந்த ஒரு ஐசிசி தொடரிலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதுவரை இரண்டு உலகக் கோப்பைகளை வென்றுள்ள இலங்கை அணியின் தற்போதைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அவர்களுடைய கிரிக்கெட் தரத்தை இழந்து பத்து வருடங்களுக்கு மேலாக ஆகிவிட்டது.

- Advertisement -

இதுகுறித்து குமார் சங்கத்தரா பேசும் பொழுது ” இது எல்லோருக்கும் வேதனை அளிப்பதாக இருக்கிறது. ரசிகர்கள் மனம் உடைந்து ஏமாற்றத்துடன் கடுமையான கோபத்துடனும் இருக்கிறார்கள். நானும் இப்படிப்பட்ட ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இது எளிதான காரியம் கிடையாது. அதே சமயத்தில் உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் மீண்டும் ஒரே மாதிரியான விஷயங்களை செய்து நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. நாம் மாற்றங்களுக்கு தகுந்த வகையில் மாறி கொள்ளவில்லை. இதன் காரணமாக நாம் பொருத்தமற்றவர்களாக போய்விட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles