நானே சொல்றேன்.. தென்னாப்பிரிக்காவை பார்த்து இந்திய அணிக்கு பதட்டம் இருக்கு.. காரணம் இதான் – அஸ்வின் கருத்து

இன்று டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய அணி முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் எந்த அணி வென்றாலும் அரை இறுதிக்கான வாய்ப்பு மிக அதிகமாக மாறிவிடும். எனவே இரு அணிக்கும் இது மிக முக்கியமான போட்டியாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் இரண்டு அணிகளும் சம பலம் கொண்டவையாக உள்ளன. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சவால் தரக்கூடிய வகையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகள் மட்டுமே இருக்கின்றன. அதே சமயத்தில் இந்த போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் இந்திய அணி பதட்டத்தில் இருக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இந்த போட்டியில் இந்திய அணியே ஃபேவரைட் ஆக இருக்கும். அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்கா அணியில் மிக நல்ல பேட்ஸ்மேன் இருக்கிறார்கள். அவர்களிடம் போட்டியை மாற்றும் சக்தி இருக்கிறது. இவர்களை நினைக்கும் பொழுது நிச்சயம் இந்திய அணி பதட்டமாக இருக்கும். இந்த வடிவத்தில் இன்றைய நாளில் தென் ஆப்பிரிக்கா சிறப்பாக விளையாடினால் போட்டியில் என்ன வேண்டுமானாலும் செய்யும்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles