இன்று இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெல்வதற்கு பாகிஸ்தான் அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அறிவுரை கூறிய ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இந்தப் போட்டிக்கான மைதானம் மற்றும் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது பாகிஸ்தான் அணிக்கு ஒரு கூடுதல் சாதகத்தை தற்பொழுது ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணியும் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை களத்தில் இறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் தங்களிடம் இருக்கும் மர்ம சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த வேண்டும் என்பதே திட்டமாக இருக்கிறது. இந்திய அணியும் தன்னுடைய பயிற்சியில் உஸ்மான் தாரிக் பந்துவீச்சை எதிர்த்து விளையாடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுதல்களை நடத்தி வருகிறது. கேப்டன் சூரியகுமார் யாதவ் உஸ்மான் தாரிக் ஸ்டைலில் பந்து வீசி இந்தியா பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும் பொழுது “பாகிஸ்தான் இந்திய அணி வெல்ல ஒரே வழிதான் இருக்கிறது. அவர்கள் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். அப்படி பேட்டிங் செய்து 170 ரன் மேல் எடுக்க வேண்டும். இதைச் செய்தால் இந்திய அணியை அடுத்து ஒவ்வொரு ஓவரிலும் அழுத்தத்திற்கு அவர்களால் கொண்டுவர முடியும். இந்த இரண்டையும் அவர்களால் செய்ய முடியாவிட்டால் நிச்சயம் இந்திய அணியை பாகிஸ்தான் அணியால் வெல்லவே முடியாது. அவர்களிடம் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு அவர்களுடைய சுழல் பந்துவீச்சு மட்டுமே” என்று கூறியிருக்கிறார்.

