ஹர்பஜன் இனிமே அமைதியா இருக்க மாட்டேன்.. நான் யாருனு காட்டட்டுமா? – பாக் தன்வீர் அகமத் கோபம்

இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் தன் குறித்து கடுமையாக பேசியதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமத் விமர்சனம் செய்திருக்கிறார். ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் பக்கம் இருந்து வரும் கருத்துகளுக்கு அதிரடியான எதிர் கருத்தை தெரிவித்து வருகிறார். இந்த வகையில் தன்வீர் அகமத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் பற்றி பேசி வந்ததற்கு ஹர்பஜன் சிங் கடுமையான முறையில் பதிலடி கொடுத்திருந்தார். தற்போது இது பிரச்சினையாக மாறி இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து தன்வீர் அகமத் பேசும் பொழுது ” ஹர்பஜன்சிங் ஒரு பொதுவானவராக கிரிக்கெட் கமெண்ட்ரி செய்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் அவர் பாகிஸ்தானின் உஸ்மான் தாரிக் பந்துவீச்சை ஏற்றுக் கொள்ள முடியாது புறக்கணிக்கிறேன் என்று கூறுகிறார். இன்னொரு பக்கத்தில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க கூடாது என்கிறார். ஆனால் அவர் பாகிஸ்தான் வீரர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு நேர்மை கிடையாது. அப்படி இருந்திருந்தால் இப்படி இரட்டை முகத்துடன் நடந்து கொண்டு இருந்திருக்க மாட்டார்”

- Advertisement -

“அவர் என்னைப் பற்றி பேசிய கடைசி வீடியோவில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். ஆனால் நான் இப்போதும் கூட கண்ணியமான கட்டுப்பாடான முறையில் பேசிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் இனியும் ஹர்பஜன் சிங் என் குறித்து பேசினால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். நான் யார் என்று அவருக்கு காட்டுவேன். பிறகு யாருக்கு மரியாதை அதிகம் இருக்கிறது இல்லை என்பது தெரிந்து விடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles