தற்போது ஒட்டுமொத்த இந்திய அணி நிர்வாகத்திற்கும் இந்திய அணி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்ட அபிஷேக் சர்மா, நாளை நமிபியா அணிக்கு எதிராக போட்டியில் விளையாட விட்டாலும், அடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கை கொழும்பு மைதானத்தில் பாகிஸ்தான அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய செய்தியாக அமைந்திருக்கிறது.
அடுத்து கடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக விளையாடாத பும்ரா முழுமையாக காய்ச்சலில் இருந்து குணமடைந்து விட்டார் என்று அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் நாளைய போட்டியில் அவர் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மிக முக்கிய செய்தியாக நியூசிலாந்து ஒருநாள் தொடரில் காயமடைந்து வெளியேறிய வாஷிங்டன் சுந்தர் முழுவதுமாக உடல் தகுதியை பெற்று விட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால் அவர் நாளையே களமிறங்கி விளையாட முடியும்.
டி20 உலகக் கோப்பை தொடரில் போட்டிகள் நடக்க நடக்க ஆடுகளங்கள் உடைந்து சுழல் பந்துவீச்சு சாதகமாக மாறும். இந்த நிலையில் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரின் வருகை மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. தற்போது டி20 உலகக் கோப்பை இந்திய அணிகள் உள்ள 15 வீரர்களும் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக தயார் நிலையில் இருப்பார்கள் என்பது மிகப்பெரிய செய்தியாக இந்திய ரசிகர்களுக்கு அமைந்துள்ளது!

