இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த மைதானம் பெரியதாகவும் அதேவேளையில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையிலும், ஆஸ்திரேலியா அணியில் பல நட்சத்திர வீரர்கள் இல்லாத போதும், இந்த ஆஸ்திரேலியா அணியை தனது முதல் போட்டியை சிறப்பான முறையில் விளையாட வென்று பல விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. நாதன் எல்லீஸ் மற்றும் ஆடம் ஜாம்பா இருவரும் தலா நான்கு விக்கெட் வீழ்த்தினார்கள். மேலும் இந்த போட்டியில் கேப்டன் மார்ஸ் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் விளையாடவில்லை.
இந்த டி 20 உலகக் கோப்பைக்கு எந்த நான்கு அணிகள் அரையறுதி போட்டிக்கு தகுதி பெறும் என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் மற்றும் ஜேசன் கில்லஸ்பி இருவரிடமும் கேள்வி முன் வைக்கப்பட்டது. அவர்கள் இருவருமே தங்களுடைய ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது என்று கூறியிருந்தார்கள். சொந்த மண்ணில் இலங்கையே தடுமாறும் நிலையில், நட்சத்திர வீரர்கள் இல்லாத போதும் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி வென்று, தங்கள் முன்னாள் வீரர்களின் கருத்துகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறது. தாங்கள் எப்பொழுதும் சாம்பியன் என்று காட்டியிருக்கிறார்கள்!

