இந்தியா மேட்ச் சாதாரணம்.. என் பவுலிங் பார்த்து பயந்துட்டாங்க.. அதான் விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்க – உஸ்மான் தாரிக் அதிரடி கருத்து

பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் பந்துவீச்சு குறித்து இந்தியா பக்கத்தில் இருந்து சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்களும் சந்தேகங்களும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியர்கள் அழுத்தத்தில் இருக்கின்ற காரணத்தினால் தான் தன்னைக் குறித்து இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆனால் தான் போட்டிக்கான தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும் உஸ்மான் தாரிக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒரு போட்டியில் கிரீன் உஸ்மான் தாரிக் வந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். பிறகு அவர் வெளியேறி செல்லும் பொழுது உஸ்மான் தாரிக் பந்தை எறிவதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து அப்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதம் சென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது இது குறித்து பேசி உள்ள உஸ்மான் தாரிக் “இந்தியர்கள் மிகவும் அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அதன் காரணமாகத்தான் என் பந்துவீச்சு குறித்து விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் என்னுடைய பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். மேலும் இந்திய அணிக்கு எதிரான போட்டி எனக்கு சாதாரண போட்டிதான். இந்த போட்டி குறித்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது நம்முடைய மனநிலையையும், பயிற்சியையும் பாதித்துவிடும். விஷயங்களை எளிமையாக வைத்துக் கொண்டு வெற்றி பெறுவேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles