நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி உடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் தாமாக வந்து கெஞ்சும் என்று தனக்குத் தெரியும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அதிரடியாக தெரிவித்திருக்கிறார். இன்று பாகிஸ்தான் அரசாங்கம் தனது முடிவை மாற்றிக் கொண்டு இந்திய அணிக்கு எதிராக விளையாட இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து அவர் இதை விமர்சனம் செய்திருக்கிறார்.
இதற்கு முன்பு பேசி இருந்த ஹர்பஜன்சிங் நிச்சயம் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடும் என்று கூறியிருந்தார். உண்மையில் பாகிஸ்தானுக்கு தைரியம் இருந்தால் தாராளமாக அவர்களது முடிவில் தைரியமாக இருக்கலாம் என்றும் சொல்லி இருந்தார். அதே பேட்டியில் பாகிஸ்தான் நிச்சயம் தனது முடிவில் உறுதியாக இருக்காது என்றும் அவரே கூறி இருந்தார்.
தற்போது இது பற்றி பேசி இருக்கும் அவர் கூறும் போது ” பாகிஸ்தான் இல்லாமலே இந்த உலகக் கோப்பை தொடரை ஐசிசி நடத்த முடியும் என அவர்களுக்கு தாமதமாக புரிந்திருக்கிறது. இந்தியா இல்லாமல்தான் இந்த தொடரை நடத்த முடியாது என்று அவர்களுக்கு அதுவும் புரிந்து இருக்கும். பங்களாதேஷுக்காக ஆதரவாக இருக்கிறோம் என்று என்னென்னமோ கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இறுதியாக இந்திய அணிக்கு எதிராக விளையாட அவர்கள் கெஞ்சுவார்கள் என்று எனக்கு தெரியும். ஏனென்றால் விளையாடாவிட்டால் பெரிய பொருளாதார இழப்புகளை அவர்கள் சந்திப்பார்கள் என்று கூறி இருக்கிறார்”

