உலகக் கோப்பை போட்டிகளை தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகளை கொண்டாட்ட டி20 தொடரில் ஆட இருக்கிறது. இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் வந்து வீச்சு தேர்வு செய்தது.
ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்றார். மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்த நிலையில் இளம் வீரர்களை கொண்ட இந்தியா களமிறங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.ஷார்ட் 13 ரன்களில் ஆட்டம் இழக்க அவரைத் தொடர்ந்து ஜோஸ் இங்கிலீஷ் களம் இறங்கினார். இவர் ஸ்டீவன் ஸ்மித்துடன் சேர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். இந்த இரண்டு வீரர்களும் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியா அணி மிகப்பெரிய ஸ்கோர் குவிக்க உதவினர்.
இவர்கள் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 13 ரன்கள் சேர்த்த நிலையில் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் ஆட்டம் இழந்தார். இவர் ஆட்டம் இழந்தாலும் மறுமுனையில் ஆடிய இங்கிலீஷ் மிகச்சிறப்பாக விளையாடிய டி20 சர்வதேச போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர் 50 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 110 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் ஸ்டாய்னிஷ் மற்றும் டீம் டேவிட் அதிரடியால் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்தது. 13 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 19 ரன்கள் எடுத்த டீம் டேவிட் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் முத்துராஜ் ரன் எதுவும் எடுக்காமலும் ஜெய்ஸ்வால் 21 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 22 நாட்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிஷான் இருவரும் மூன்றாவது விக்கெட் இருக்கு 112 ரன்கள் சேர்த்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டதோடு வலுவான அடித்தளமும் அமைத்தனர். சிறப்பாக விளையாடிய இசான் கிசான் 39 பந்துகளில் 5 சித்தர்கள் மற்றும் 2 பௌண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து திலக் வருமா கேப்டன் உடன் ஜோடி சேர்ந்தார்.
இஸான் கிசான் ஆட்டம் இழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரை சதம் எடுத்தார். திலக் வர்மா 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க ரிங்கு சிங் களத்திற்கு வந்தார். சூரியகுமார் யாதவியின் அதிரடியால் இந்தியா இலக்கை வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. 42 பந்துகளில் 80 ரன்கள் எடுத்த சூரியகுமார் யாதவ் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவுட் ஆனார்.
இந்திய அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் ஏழு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த ஐந்து பந்துகளில் 3 ரன்கள் தேவை என்று நிலையில் சிங்கில் எடுத்தார். அப்போது ஸ்ட்ரைக் வந்த அக்சர் பட்டேல் அவுட் ஆனார். இதனால் இந்தியா 3 பந்துகளில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த ரவி பிஸ்னாய் ரன் அவுட் முறையில் வெளியேற மீண்டும் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியாக இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் ஒரு ரன் எடுக்க அர்ஷதீப் சிங் ஆட்டம் இழந்தார். அப்போது ஒரு பந்துக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா அணியின் அப்பாட் வீசிய நோபாலை சிக்ஸருக்கு விரட்டி ஆட்டத்தை முடித்தார் . எளிதாக வெற்றி பெற வேண்டிய நிலையில் கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்ததால் இந்தப் போட்டி திரில்லிங்காக மாறியது. எனினும் ரிங்கோசிங் கடைசி வரை ஆடி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் இந்தியா இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

