மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. 181 ரன்களை விரட்டிய டெல்லி அணி வெறும் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் டெல்லி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்த தோல்விக்கு பின் டெல்லி அணியின் கேப்டன் டூ பிளஸி பேசும் போது, ஃபீல்டிங் மற்றும் பவுலிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டோம். நிச்சயம் எங்களின் வீரர்கள் போராடினார்கள். அதேபோல் இந்த பிட்சில் பேட்டிங் செய்வது எளிதான விஷயமல்ல. அதனால் பவுலர்களுக்கு கூடுதல் உதவி கிடைத்தது என்றும் சொல்லலாம். அவர்களின் பேட்டிங் வரிசையும் பலமாக அமைந்தது.
2 ஓவர்கள்
எங்களின் பவுலிங் கடைசி 2 ஓவர்களில் ஸ்லிப்பாகிவிட்டது. அங்கிருந்துதான் மும்பை அணி பக்கம் போட்டி சாயத் தொடங்கியது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் சுமார் 50 ரன்களை விளாசிவிட்டார்கள். நாங்கள் 18 ஓவர்களாக செய்த பணியை, கடைசி 2 ஓவர்களில் நாசம் செய்துவிட்டார்கள். அங்கிருந்து ஆட்டம் எங்களின் கைகளிலேயே இல்லை.
இன்றைய ஆட்டம் கோலியாத்தாக உருவாகுவதற்கு ஒரு வாய்ப்பை அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் மும்பை அணியை பாராட்ட வேண்டும். ரிஸ்வி சிறப்பாக அடினார். அவரிடம் திறமை இருக்கிறது. மும்பை போன்ற பலமான அணியுடன் விளையாடும் போது, அனைத்து நேரங்களிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
அக்சர் படேல் மிஸ்ஸிங்
பேட்டிங்கை பொறுத்தவரை சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால் எல்லா முயற்சிகளும் சொதப்பலாக அமைந்தது. கடைசி 6 அல்லது 7 போட்டிகளில் ஒன்று பேட்டிங்கில் சொதப்பிவிடுகிறோம்.. அல்லது பவுலிங்கில் சொதப்புகிறோம்.. அக்சர் படேல் மற்றும் ஸ்டார்க் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. அதில் அக்சர் படேல் போன்ற ஒருவரை இந்த பிட்சில் தவறவிட்டுவிட்டோம்.
மும்பை அணியின் சான்ட்னர் எப்படி பவுலிங் செய்தார் என்பதை பார்த்த போது, சோகமாக இருந்தது. ஏனெறால் இருவருமே ஒரே மாதிரியான பவுலர்கள் தான். இந்த பிட்சில் ஒரு ஸ்பின்னரின் பங்களிப்பு தங்கத்திற்கு ஈடானது. அதிலும் அக்சர் படேலை போன்ற சர்வதேச அனுபவத்துடன் உள்ள பவுலர் இல்லாததே தோல்விக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

