அஷுதோஷ் அடித்த அடி.. அடிப்படைகளை சரியாக செய்யவில்லை.. ரிஷப் பண்ட் சோகம்

ஐபிஎல் தொடரின் 4வது ஆட்டத்தில் லக்னோ அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றியை பெற்றது. இதில் முதல் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 209 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்களை குவித்து த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

ரிஷப் பண்ட் பேட்டி

- Advertisement -

கடைசி வரை களத்தில் இருந்த அஷுதோஷ் சர்மா 31 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 66 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் லக்னோ அணி நிர்வாகிகள், வீரர்கள் சோகமடைந்தனர். இந்த தோல்வி குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசும் போது, இந்த பிட்சில் எவ்வளவு ரன்கள் தேவையோ, அதனை பேட்ஸ்மேன்கள் குவித்தோம். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர்.

- Advertisement -

மிடில் ஓவர்களில் கொஞ்சம் தடுமாறினாலும், இந்த விக்கெட்டில் சிறந்த ஸ்கோர் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த போட்டியில் இருந்து ஒரு அணியாக பாசிட்டிவை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோல் கற்பதற்கும் நிறைய விஷயங்கள் உள்ளது. அடிப்படை விஷயங்களை சரியாக செய்துள்ளோம். இன்னும் அதில் அதிக கவனம் வேண்டும்.

2 பார்ட்னர்ஷிப் மாற்றியது

- Advertisement -

ஏனென்றால் இது போதாது. டெல்லி அணியிலும் 2 சிறந்த பார்ட்னர்ஷிப்கள் கட்டமைக்கப்பட்டது. ஸ்டப்ஸ், அஷுதோஷ் மற்றும் விப்ராஜ் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். பந்து எவ்வளவு பழையதாக மாறியதோ, அந்த அளவிற்கு ஸ்பின்னர்களுக்கு உதவி செய்தது. நிச்சயமாக அழுத்தத்தை உணர்ந்தோம் என்று சொல்ல வேண்டும். 

ஆனால் ஒரு அணியாக செட்டிலாக இன்னும் நேரம் இருக்கிறது. முதல் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறோம். கடைசியில் நான் ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்டேன். ஒருவேளை அது பேடில் அடித்திருந்தால், ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். அதேபோல் ஸ்டம்பிங் வாய்ப்பு கிடைத்ததை மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். 

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles