அன்று ஜடேஜாவுக்கு 1 வருட தடை.. ஹர்திக் பாண்டியாவை தடை பண்ண வாய்ப்பு இருக்கா.?.. ஐபிஎல் விதி பற்றிய முழு விவரம்.!

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் வைத்து நடைபெற இருக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களுக்கான கடைசி தேதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

ஒவ்வொரு அணியும் இந்த வருட ஐபிஎல் ஆட்டத்தை பொறுத்து தங்களது முக்கியமான வீரர்களை வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை அணியில் இருந்து நீக்கினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சிறப்பாக செயல்பட்டு வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு மாற்றப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

2021 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா 2021 ஆம் ஆண்டு அந்த அணியால் கழட்டி விடப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை ஐகானிக் வீரராக தேர்ந்தெடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாகவும் நியமித்து அழகு பார்த்தது. ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் குஜராத் அணி தங்களது முதல் வருட ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி சிஎஸ்கே அணி இடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

பந்துவீச்சு பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பு என அனைத்து ஏரியாக்களிலும் சிறப்பாக ஸ்கோர் செய்த ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை வாங்குவதற்காக கடந்த ஐபிஎல் ஏலத்தின் போது 17.5 கோடி ரூபாய்க்கு வாங்கிய ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை ஆர்சிபி அணிக்கு விட்டு இருக்கிறது .

கடந்த 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ரவீந்திர ஜடேஜாவிற்கு தடை விதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்ததோடு மும்பை அணியில் புதிய ஒப்பந்தத்தோடு தன்னிச்சையாக இணைய அவர் முயற்சித்ததால் 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இதே பிரச்சினை காரணமாக 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் ரவீந்திர ஜடேஜா விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது இந்த தடையானது ஹர்திக் பாண்டியாவிற்கு பொருந்தாது. ஏனெனில் இரண்டு அணியின் நிர்வாகிகளும் கலந்தாலோசித்து ஒரு மனதுடன் இந்த முடிவானது எடுக்கப்பட்டு இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவிற்கான ஒப்பந்த தொகை முழுவதையும் செலுத்தி அவரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்க இருக்கிறது. மேலும் இந்த டிரேடிங்கிற்காக இதுவரை அறிவிக்கப்படாத ஒரு தொகையையும் குஜராத் அணிக்கு மும்பை செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு அணிகள் வீரர்களை மாற்றிக் கொள்வதோடு ஒரு அணி மற்றொரு அணியின் வீரரை புரிந்துணர்வுடன் விலை கொடுத்து வாங்கலாம் என்பது ஐபிஎல் கிரிக்கெட்டின் விதியாக இருப்பதால் ஹர்திக் பாண்டியா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஆனால் இது போன்ற ட்ரேடிங் மற்ற அணிகளை நிச்சயம் பாதிக்கும். வலுவான ஒரு அணியை கட்டமைத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணி டிரேடிங் செய்து இருப்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles