பாகிஸ்தான் மேட்ச்.. இந்தியாவின் கலக்கல் பிளேயிங் 11.. மாஸான 2 மாற்றங்கள்.. கம்பீர் போடும் கணக்கு

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டியை நாளை இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானம் சுழல் பந்துவீச்சிக்கு சாதகமாக இருப்பதோடு பெரிதாகவும் இருக்கும். எனவே இரு அணிகளும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கும். இந்த வகையில் இந்திய அணிகளும் இரண்டு முக்கிய மாற்றங்கள் நடைபெறலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

கடந்த நமிபியா போட்டியில் முதல் ஓவரை ஹர்திக் பாண்டியா வீசியிருந்தார். ஏனென்றால் பாகிஸ்தான் போட்டிக்கு அர்ஸ்தீப் சிங் விளையாட மாட்டார் ஹர்திக் பாண்டியாதான் முதல் ஓவரை வீச வேண்டியது இருக்கும் என்று கூறப்பட்டது. ஆசியக் கோப்பை போலவே அர்ஸ்தீப் சிங் இடத்திற்கு குல்தீப் யாதவ் கொண்டுவரப்படுவார் என்றும், கூடுதலாக ரிங்கு சிங் இடத்திற்கு சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் கொண்டு வரப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு மாற்றங்களையும் கம்பீர் செய்வது உறுதி என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் அணியும் குறைந்தது ஆறு சுழல் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய பிளேயிங் XI: இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, சிவம் துபாய், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles